குப்பைமேனி இலையின் சாறு குடிப்பதால், சளி, வறட்டு இருமல் தொண்ட கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
தெரு ஓரங்களிலும், குப்பைமேடுகளில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் குப்பைமேனி செடி நம்மில் பலரும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்போம். ஆனால் இந்த குப்பைமேனி செடி பலவகை நோய்களுக்கும் அருமருந்தாக திகழ்கிறது. குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களுமே மருத்துவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் குப்பைமேனி இலையின் சாறு குடிப்பதால், சளி, வறட்டு இருமல் தொண்ட கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
அதே போல் குப்பைமேனி இலையில் சாறு பிழிந்து ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும். மேலும் வயிற்றில் உள்ள புழுக்களும் வெளியேற்றப்படும். குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணெயில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் அழியும்.
மேலும் குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சைனஸ் நோய்க்கு சிறந்த தீர்வாகும். ரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும். சொத்தைப் பல் உள்ளவர்கள் பல்லில் வலி ஏற்படும் போது 2 அல்லது 3 குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தை பல்லில் வைத்தால், அந்த பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும். நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் படுத்திருப்பதால் படுக்கைப்புண் ஏற்படும். இந்த படுக்கைப்புண் நீங்க, குப்பைமேனி இலையுடன் வேப்ப எண்ணெய் சேர்த்து அரைத்து புண்களில் தடவி வந்தால், விரைவிலேயே புண் ஆறிவிடும்.
அசைவம் சாப்பிடாமலே எலும்புகளை வலுப்படுத்தலாம்.. இந்த 7 சைவ உணவுகளை சாப்பிட்டால் போதும்..
படை, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலை உடன் மஞ்சள் மற்றும் கல் உப்பு ஆகியவற்றை அரைத்து, அதை தடவி பின் சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய் இருந்த தடமே இல்லாமல் போய்விடும். அதே போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும், குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, புண்ணில் தடவி வந்தால் புண் விரைவில்யே ஆறும். தேள், பூரான், விஷப்பூச்சிக்கடிக்கு, குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.
இதய நோய்களைத் தடுக்க நீங்கள் எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? ஆய்வில் வெளியான தகவல்