சிகப்பான அழகைப் பெற இனி க்ரீம்கள் வேண்டாம்; இந்த பழம் மட்டும் இருந்தாலே போதும்...

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 01:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
சிகப்பான அழகைப் பெற இனி க்ரீம்கள் வேண்டாம்; இந்த பழம் மட்டும் இருந்தாலே போதும்...

சுருக்கம்

No longer creams to get rid of the beauty This fruit is just enough ...

சிகப்பான அழகைப் பெற கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். 

சரும நிறத்தை அதிகரிக்க இந்த இயற்கை வழிகளை நாடினாலே போதும். சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை தோல் பொடி தயாரிப்பது எப்படி?

மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பொடி 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

1.. வறட்சியான சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

2.. எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

மாதுளை பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்

ரோஸ் வாட்டர் – சிறிது

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள், கருவளையங்கள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிக்காட்டும்.

பின் குறிப்பு:

இந்த ஃபேஸ் பேக்குகள் முக்கிய பொருளாக இருப்பது மாதுளை தோல். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake