இந்தியர்களில் நான்கில் 3 பேருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உயிர்ச்சத்துக்களின் முக்கியமானது வைட்டமின் டி. இது நம் உடலில் கால்சியம், பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய ஊட்டச்சத்து. இதனால் வலுவான எலும்புகள், பற்கள், தசைகளை வலுவடைகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்த சத்து குறைந்தால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
புரோஸ்டேட் புற்றுநோய், மனச்சோர்வு, நீரிழிவு நோய், முடக்கு வாதம் ஆகிய உடல்நலக் கோளாறுகளுடன் வைட்டமின் டி குறைபாட்டை இணைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. டாட்டா 1எம்.ஜி லேப்ஸ் (Tata 1mg Labs) இன் ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அதில் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 76% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
undefined
இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள 27 நகரங்களில் நடத்தப்பட்டது. அதில் 2.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கு பெற்றனர். அதில் ஒட்டுமொத்த ஆண்களில் 79 சதவீதம், பெண்களில் 75 சதவீதம் பேருக்கு உடலில் வைட்டமின் டி தேவையான அளவை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. வதோதரா (89%), சூரத் (88%) ஆகிய இடங்களில் மிக அதிகமாகவும், டெல்லி-என்சிஆர் பகுதியில் (72%) குறைவாகவும் வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
டாட்டா 1 எம்ஜி( Tata 1mg) தரவுகளின்படி, இளைஞர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வு அறிக்கையின்படி, சுமார் 25 வயதுக்குட்பட்டவர்களில் 84% பேர், 25-40 வயதுடையவர்களில் 81% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது.
வைட்டமின் டி குறைய காரணம்
மாறும் உணவுப் பழக்கம், போதுமான சூரிய ஒளிபடாத உட்புற வாழ்க்கை முறை ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டிற்கு முக்கிய காரணம். இளம் வயதினரிடையே அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு, வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகள் எடுக்காதது காரணம். சூரிய ஒளியின் பருவகால மாறுபாடுகளும் ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என டாட்டா 1 எம்ஜி லேப்ஸ் மருத்துவர் ராஜீவ் சர்மா கூறுகிறார்.
கைக்குழந்தைகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்த சூரிய ஒளியில் இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது வைட்டமின் டி அளவை பரிசோதனை செய்ய வேண்டும் என டாட்டா 1 எம்ஜி லேப்ஸின் மருத்துவத் தலைவர் டாக்டர் பிரசாந்த் நாக் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: இந்த நபர்களை அவமானம் செஞ்சா நரகத்தில் ஜந்துக்கள்கிட்ட மாட்டி, பிசாசுகளுடன் வாழணும்.. எச்சரிக்கும் கருட புராணம்
வைட்டமின் டி அதிகரிக்க..
முட்டையின் மஞ்சள் கரு, மீன் எண்ணெய், சிவப்பு இறைச்சி, தானிய உணவுகள் போன்றவை வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மனித தோலில் வைட்டமின் 'டி'க்கு முன்னோடியாக செயல்படும் ஒரு வகை கொலஸ்ட்ரால் உள்ளது. சூரியனில் இருந்து வரும் யூவி -பி (UV-B) கதிர்வீச்சு வெளிப்படும் போது, அது வைட்டமின் 'டி' ஆக மாறுகிறது. அதனால் சூரிய ஒளியில் அவ்வப்போது நடமாட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஈடுபட ஆண் உறுப்பு அளவு கூட முக்கியமில்ல.. ஆனா இந்த விஷயம் இல்லன்னா வேஸ்ட்!