சீனாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய மாறுபாடு, கோரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை காட்டுகிறது.
கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்திருந்தாலும், அவ்வப்போது புதிய மாறுபாடுகள் தோன்றி அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் எரிஸ் என்ற மாறுபாடு பரவியது. இந்த சூழலில் சீனாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய மாறுபாடு, கோரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை காட்டுகிறது. சமீபத்திய தரவுகளில், BA.2.86 என்ற புதிய மாறுபாடு நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை சீன நிபுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டிருந்த அறிக்கையில் "கோவிட்-19 மாறுபாடு BA.2.86 ஐ 'கண்காணிப்பில் உள்ள மாறுபாடு' என WHO இன்று நியமித்துள்ளது, ஏனெனில் அது அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. சில நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது” என்றும் தெரிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் எரிஸ் என்ற புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், மற்றொரு வகையான BA.2.86 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்த வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனால் உலக நாடுகள் விழிப்புணர்வை அதிகரிக்கவும், கோவிட் நடைமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளன, ஏனெனில், இதுவரை, இந்த புதிய வகை அதிக முறை உருமாற்றம் அடைந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவின் பரவல் விகிதம் குறித்தும், அது நோய் எதிர்ப்பு சக்தியுடன் எவ்வளவு நன்றாக தொடர்பு கொள்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த புதிய வகை, Omicron இன் BA.2 துணை வகை, புதிய மாறுபாடு ஆகும். BA.2.86 என்ற இந்த மாறுப்பாட்டிற்கு Pirola என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனாவின் ஸ்பைக் புரதத்தில் 30 க்கும் மேற்பட்ட அமினோ அமில மாற்றங்கள் உள்ளன.
அமெரிக்கா தான் எல்லாதுக்கும் காரணமா? கோவிட் தோற்றம் குறித்து ரஷ்யா வெளியிட்ட 2000 பக்க அறிக்கை..
அறிகுறிகள் என்னென்ன?
வைரஸிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இந்தியா கவலைப்பட வேண்டுமா?
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மிகவும் ஆபத்தான கோவிட் வகைகளை எதிர்த்துப் போராடியுள்ளது. ஆபத்தான டெல்டா மாறுபாடு தொடங்கி, அதிகமுறை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் மாறுபாடு வரை பல மாறுபாடுகள் நாட்டில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே, இந்த புதிய மாறுபாட்டைக் கண்டறிவதைப் பற்றி இந்தியா கவலைப்பட வேண்டுமா என்று வரும்போது, கோவிட் மற்றும் அதன் மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் போது இந்தியாவில் உள்ள மக்கள் சிறந்த நிலையில் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சிக்கல்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கூடுதல் விழிப்புடன் இருக்கவும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.