இந்த டிப்ஸ ஃபோலோ பண்ணுங்க.. 40 வயதான பிறகும் செக்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணாலாம்..

By Asianet Tamil  |  First Published Aug 19, 2023, 8:03 PM IST

வயதான பிறகும் உடலுறவு சுகத்தை எப்படி அடையலாம் என்பது குறித்து பார்க்கலாம். 


பொதுவாக வயதாகவிட்டாலே உடறவில் நாட்டம் இருக்காது. அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலுறவு கொள்வதில் ஆர்வமின்றி இருப்பார்கள். ஆனால் வயதான பிறகும் உடலுறவில் ஈடுபட்டால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு உளவியல் ரீதியாகவும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே வயதான பிறகும் உடலுறவு சுகத்தை எப்படி அடையலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

வயதாகும்போது, உடலுறவை உச்சத்தை அடைவது கடினமாகிறது. எனவே உச்சத்தை அடைய வேண்டும் என்று நினைக்காமல், உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்களும் உங்கள் துணையும் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்கும் போது கூட அது உச்சக்கட்டத்தை போலவே சுவாரஸ்யமாக இருக்கும்.

Latest Videos

undefined

கணவன் மனைவி இணைந்து ஆபாச படம் பார்ப்பது நல்லதா?.. இது ஒரு நல்ல உடலுறவுக்கு வழிவகுக்குமா?

பொதுவாக உடலுறவை பிறப்புறுப்பு உடலுறவு என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இருப்பினும், அதை "நெருக்கமான உடல் தொடர்பு" என்று வரையறுக்க நம் மனநிலையை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான உறவுகளில் உடல் நெருக்கம் முக்கியமானது, இதை வெளிப்படுத்த பிறப்புறப்பின் மூலம் உடலுறவு எப்போதும் மகிழ்ச்சியான வழி அல்ல. உண்மையில், 10 பெண்களில் 4 பேர் மட்டுமே பிறப்புறப்பு உடலுறவு மூலம் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். 

எனவே உடலுறவு மட்டுமே காமம் இல்லை. கட்டுப்பிடித்து தூங்குவது, முத்தம் கொடுப்பது, சுய இன்பம் செய்த் கொள்வது என அனைத்துமே காமம் தான். எனவே உங்கள் துணையுடன் இதை முயற்சி செய்தால் உடலுறவு இனிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 

வயதான பிறகு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்க்கு பெரும்பாலும் மருந்து மாத்திரைகளை எடுக்கின்றனர். இந்த மருந்துகளாலும் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே என்ன மருந்து எடுக்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை. ஆனால் அதே நேரம் உடலுறவுக்காக மருந்துகள் எடுத்தாலும் அதிலும் கவனம் தேவை.

உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்ட  உடற்பயிற்சி அவசியம். எனவே நல்ல தாம்பத்ய சுகத்திற்கு உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். வயதான பிறகு தாம்பத்ய சுகத்தை அதிகரிக்க உடற்பயிற்சி உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணத்தை மாற்றி, சுறுசுறுப்பாக இருப்பதும் தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்த உதவும். 

 

click me!