செலவே இல்லாமல் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை வழி...

 
Published : Apr 23, 2018, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
செலவே இல்லாமல் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை வழி...

சுருக்கம்

Natural way to reduce the cap without cost

தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். 

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை – 1

பூண்டு- 3 பற்கள்

சுடுநீர் – 1 கப்

பூண்டு 

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை 

எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களுள் முதன்மையானது என்று சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

செய்முறை #1 

முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2 

பின்பு பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். பூண்டு பற்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். நிச்சயம் இந்த பானம் மிகவும் சுவையாக இருக்காது. 

இந்த பானத்தைக் குடிப்பது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும். இருப்பினும், தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், கஷ்டத்தை அனுபவித்து தானே ஆக வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?