தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க கறிவேப்பிலை இப்படி சாப்பிட்டு பாருங்களேன்...

 
Published : Apr 21, 2018, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க கறிவேப்பிலை இப்படி சாப்பிட்டு பாருங்களேன்...

சுருக்கம்

Let eat curry leaves to increase the growth of the hair

கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள்

அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும் நரைமுடியை போக்குவதற்கு, கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகள் நீக்கி, கண் பார்வையை பிரகாசமாக்க தினமும் கறிவேப்பிலை பானம் செய்து குடிக்கலாம்.

தினமும் ஒரு மாதம் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கறிவேப்பிலை பானம் செய்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகிவிடும்.

கறிவேப்பிலையானது வெண்குஷ்டம், மூலம், தோல் நோய் போன்ற பிரச்சனைகளை போக்கும் தன்மை அதிகமாக உள்ளது. எனவே தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது.

கறிவேப்பிலையில் பானம் செய்து எப்படி குடிக்கலாம்?

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாக நீரில் கழுவி, அதை நன்றாக அரைத்து, அதன் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் வடிகட்டிய கறிவேப்பிலை சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இல்லையெனில் அந்த கறிவேப்பிலை பானத்தில் சில பேரிச்சம் பழங்களையும் ஊற வைத்து கூட அருந்தலாம்.

காலையில் தேநீர் மற்றும் காப்பியை தவிர்த்து, கறிவேப்பிலை பானம் செய்து, அதில் தேங்காய்ப்பால் கலந்து கூட குடிக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?