
உலக நாடுகளை அதிர வைத்த ஒரு வைரஸ் என்று சொன்னால் அது கொரோனா வைரஸ் தான். அதன் தாக்கம் இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், அதன் திரிபுகள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது XFG என்கிற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸும், நிம்பஸ் வைரஸும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடுகள் முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டவையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பரவல், அறிகுறிகள், தாக்கம், மருத்துவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸின் XFG வகை முதன்முதலாக ஜனவரி 2025 தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் தொடங்கி இத இந்த வைரஸ் அமெரிக்காவின் பல மாகாணங்களில் பரவத் தொடங்கியது. கலிபோர்னியா, புளோரிடா, அலாஸ்கா, அலாபாமா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது சார்ஸ்-கோபவ் 2 வைரஸின் உருமாற்றமாக கருதப்படுகிறது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், பல ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், உடல் வலி, வாந்தி, சுவாசக் கோளாறுகள் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
இந்த வைகை வைரஸிற்கு தற்போது வரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. முந்தைய கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ஓரளவிற்கு பயனளிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. முகமூடி அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது. கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் நிம்பஸ் என்கிற புதிய வகை கொரோனா வைரஸும் கண்டறியப்பட்டுள்ளது. இது கடுமையான தொண்டை வலியை ஏற்படுத்துவதாகவும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையான தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகள் ஆகும். இந்த வைரஸை தடுப்பது குறித்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும். முகமூடி அணிய வேண்டியது அவசியம். பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த புதிய உருமாறிய வைரஸ்கள் காரணமாக அமெரிக்காவின் மருத்துவமனைகளில் நோயாளிகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவாச நோய்கள் மற்றும் தீவிர சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு உருமாறிய வைரஸ்களும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றினால் இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.