கொடி வகைத் தாவரமான பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் தற்போதைய உணவுப் பழக்க முறையால் பலருக்கும் பல வியாதிகள் வயது வித்தியாசமின்றி வந்து விடுகிறது. இருப்பினும் நம் உணவு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. பண்டைய காலங்களில் காய்கறிகள் மற்றும் கீரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால், நோய்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நெருங்கவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக இன்றைய காலகட்டம் இருக்கிறது. உணவு முறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிகளவில் எடுத்துக் கொண்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம். அந்த வகையில், கொடி வகைத் தாவரமான பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.
நலம் தரும் பிரண்டை
பிரண்டையானது வெப்பம் மிகுந்த இடங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது கொடி வகையைச் சேர்ந்தது. கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், சிட்டோசிரால், கரோட்டின், புரதம், வைட்டமின் சி, அமிரோன், அமைரின், குவாட்ராங்குலாரின் ஏ மற்றும் குவர்சிடின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் அதிகம் நிறைந்துள்ளது. உடலை வஜ்ரம் போல பாதுகாக்கும் காரணத்தால், பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயரும் உள்ளது.
கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய திறன் பிரண்டைக்கு உள்ளது என கூறப்படுகின்றது. அவ்வகையில் இது எந்ததெந்த நோய்களை குணமாக்க உதவுகின்றது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரண்டையின் நன்மைகள்
அடிக்கடி பிரண்டையை சாப்பிட்டு வந்தால், அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து, உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி விடும்.
இரைப்பையில் உண்டாகும் அலர்ஜி, அஜீரணம், பசியின்மை மற்றும் குடற்புழு போன்ற நோய்கள், பிரண்டை சாப்பிடுவதால் குணமாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலியை நீங்குவதற்கு பிரண்டை உதவி புரிகிறது.
அனைவரும் விரும்பி சாப்பிடும் க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் !!
பிரண்டை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பை இருக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும்; அதோடு, மூளை நரம்புகளையும் பலப்படுத்துகிறது.
உடல் எலும்புகளுக்கு சக்தியை அளிக்கிறது பிரண்டை.
ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவை நிறுத்த உதவுவதோடு மட்டுமின்றி, வாய்வுப் பிடிப்பையும் போக்குகிறது.
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விட்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி மற்றும் காரம் சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். இதனை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும். மூளை நரம்புகள் அனைத்தும் பலமடையும்.
பிரண்டை குடலில் இருக்கும் வாயுவை அகற்றி வெளியேற்றுகிறது.
பிரண்டையை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால், உடல் எலும்புகள் பலப்படும்.