ஆண்களுக்கும் பிரீயட்ஸ் வருமா? அது வரும்போது என்னென்ன அறிகுறிகளை காட்டும் தெரியுமா?

By Ma riya  |  First Published May 25, 2023, 7:28 PM IST

ஆண்களுக்கும் பெண்களைப் போல மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


மாதவிடாய் சுழற்சி என்றாலே பெண்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அது பெரும்பாலும் பெண்களுடன் தொடர்புடையது தான். ஆனால் ஆண்களுக்கும் மாதவிடாய் காலம் இருக்குமாம். பொதுவாக பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி வரும். இந்த நேரத்தில் மனநிலை மாற்றங்கள், வயிற்று வலி, ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். 

இந்த சூழலில் ஆண்களுக்கும் இப்படி சில அறிகுறிகள் வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, ஆண்களுக்கும் மாதவிடாய் காலம் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த காலத்தில் அவர்களுக்கு வயிற்று வலி, முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் ஆகிய பிரச்சனைகள் வருகின்றன. இதனை பொதுவாக 'ஆண் மாதவிடாய்' என சொன்னாலும், இதற்கென தனி அறிவியல் பெயர் கூட உள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆண்களின் மாதவிடாயை அறிவியல் ரீதியாக 'இரிட்டபிள் மேல் சிண்ட்ரோம்' (Irritable male syndrome) என்பார்கள். இதில் ஆண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் காரணமில்லாமல் எரிச்சல் ஏற்படும். ஆண்களின் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் அவ்வப்போது குறைவாக சுரக்கலாம். 

அறிகுறிகள்: 

ஆண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வு, மனச்சோர்வு, கோபம், தனிமை ஆகிய நடத்தை மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆண்களுக்கு பெண்களை போல இரத்தப்போக்கு ஏற்படாது. ஆனால், இந்த சமயங்களில் ஆண்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நாடுவதாகவும், அது தேவையாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. 

இந்த நேரத்தில், ஆண்கள் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களுக்கு மன அழுத்தமே மிகப்பெரிய காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

இதையும் படிங்க: போர்ன் ஸ்டார்ஸ் சொல்லும் செக்ஸ் சீக்ரெட்ஸ்!!

மன அழுத்தம் 

ஆணோ பெண்ணோ மன அழுத்தத்தால் அவர்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் 'இரிட்டபிள் மேல் சிண்ட்ரோம்' (Irritable male syndrome) அடிக்கடி தூண்டப்படுகிறது. 

நிரீழிவு நோய் 

குறைந்த நேர இடைவெளியில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் மிகக் குறைந்த அளவு சுரப்பது நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். ஒருவருடைய தூக்கம் பாதிக்கப்பட்டாலே எல்லா நோய்களுக்கும் வாய்ப்பு ஏற்படும். 

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொற்று நோய்களின் அறிகுறிகள்!!

click me!