உங்களுக்குத் தெரியுமா? உயர் இரத்த அழுத்தத்தைக் கூட குறைக்கும் தன்மைக் கொண்டது பலாப்பழம்!

 
Published : Aug 14, 2017, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
உங்களுக்குத் தெரியுமா? உயர் இரத்த அழுத்தத்தைக் கூட குறைக்கும் தன்மைக் கொண்டது பலாப்பழம்!

சுருக்கம்

medical tips

பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.

கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.

பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

பழங்களிலேயே பலாப்பழம் இனிப்பான சுவையை மட்டும் கொண்டிருப்பதில்லை. அதனுள் ஏகப்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

பலாப்பழத்தில் நல்ல அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.

இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களால் ஏற்படும் கொடிய நோயான புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.

பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த சத்து கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக பார்வைக் கோளாறு, மாலைக் கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

இதில் உள்ள இனிப்பைத் தரக்கூடிய ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், சுவையை மட்டுமின்றி, உடலில் எனர்ஜியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் கொழுப்பு எதுவும் இல்லாததால், இது ஒரு ஆரோக்கியமான பழங்களுள் ஒன்றாக உள்ளது.

இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு வருவதை தடுக்கும்.

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலாப்பழத்தின் வேர் ஒரு நல்ல நிவாரணத்தைத் தரக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு இப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகினால், ஆஸ்துமாவானது கட்டுப்படும்.

கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம், பலாப்பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல், எலும்புகள் வலுவோடு இருக்கும்.

பலாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

தைராய்டு சுரப்பியை சீராக இயக்குவதற்கு காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால், தைராய்டை சீராக வைக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க