தொடை பகுதிகளை வலுவாக்க இந்த எளிய பயிற்சி உதவும்!!

 
Published : Aug 14, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
தொடை பகுதிகளை வலுவாக்க இந்த எளிய பயிற்சி உதவும்!!

சுருக்கம்

medical tips

தொடை பகுதியை வலுவாக்க பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியது.

இந்த பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சியை செய்ய இரண்டு முதன்மை வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

• முதல் விரிப்பில் கால்கனை நீட்டியபடி அமர்ந்து கொள்ளவும். பின்னர் கால்களை இருபக்கமாக முடிந்த அளவு நீட்டவும். இப்போது முதுகு பகுதியின் தசைகள் இறுக்கமாக இருப்பதால் வலி ஏற்படும். இப்போது உங்களுடைய உடம்பை வளைத்து முகத்தால் வலது கால் முட்டியை தொட வேண்டும்.

பின்னர் கால்களை மாற்றி இடது காலுக்கு செய்ய வேண்டும். தொடை பகுதியில் அதிக சதை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி செய்யும் போது சிறிது இறுக்கமாக இருக்கும். முதல் தடவை செய்யும் போது தொடையை நேராக நீட்ட முடியாது வளைந்து காணப்படும்.

கால்களில் வலி ஏற்படும். தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்தால் சுலபமாக காலை நீட்டி உடம்பை மடக்கி விடலாம். இதே போல் 15 முறை செய்ய வேண்டும்.

• இரண்டாவது பயிற்சியில் இரண்டு கால்களையும் பட்டாம்பூச்சி வடிவத்தில் மடக்க வேண்டும். பிறகு முழங்கைகள் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த இரண்டு பயிற்சிகளையும் 15 முறை செய்யலாம். இப்படி செய்வதால் உங்கள் தொடை பகுதியின் இருக்கம் குறையும். மேலும் தசைகளுக்கு வலிமையும் கொடுக்கும்.

• இடுப்பை விரிவடைய செய்யும் பயிற்சியை பார்க்கலாம். படுத்து கொண்டு இரண்டு கால்களை முட்டி வரை மடக்கி வலது காலை மடக்கி இடது காலின் மேல் வைக்க வேண்டும். இப்போது படத்தில் உள்ளவாறு வலது காலின் முட்டியை வலது கையை கொண்டு தாங்க வேண்டும்.

இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும். சிலருக்கு இடுப்பு மிகவும் இருக்கமாக இருக்கும் அவர்கள் இப்பயிற்சி செய்வதன் மூலம் அதிகப்படியான கொழுப்பு குறையும். அழகான இடுப்பை பெறலாம். இது மிகவும் சிறந்த பயிற்சி ஆகும்.

தினமும் இந்த பயிற்சிகளை 15 முதல் 25 முறை தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய தொடை பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைத்து வலிமையை கொடுக்கும். மேலும் இடுப்பு வலி மற்றும் கால் வலிக்கு இந்த பயிற்சிகள் சிறப்பான பலனைத்தரும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க