உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய் வேற என்னவெல்லாம் செய்யும்…

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய் வேற என்னவெல்லாம் செய்யும்…

சுருக்கம்

medical tips

பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.

கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.

பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகிய அடங்கி உள்ளன.

கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய், இதயத்தையும் பாதுகாக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுக்கிறது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும்.

புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.

PREV
click me!

Recommended Stories

மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks