அப்போல்லாம் முதல் இரவின்போது பால் கொடுத்து அனுப்புவாங்களே! அதில் ஏன் தெரியுமா? அதுலயும் மருத்துவம் இருக்கு…

First Published May 18, 2017, 1:36 PM IST
Highlights
medical benefits of using milk mith herbals in first night


 

பழங்காலங்களில் முதலிரவின்போது சில மூலிகைகளை நாட்டுப்பசுவின் பாலுடன் சேர்த்து மணமகளின் கையில் சொம்பில் கொடுத்து அனுப்புவார்கள். அதிலிருக்கும் மூலிகைகள் தான் குழந்தயின்மையை போக்க வல்லது.

அப்படி என்ன மூலிகைகள்?

“ தாதராபூடு” என்ற செடி இதனை “நத்தைசூரி” என்றும் கூறப்படுகிறது.

மழைக் காலங்களில் தமிழகத்தில் பரவலாக வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி. இச்செடிக்கு சாப நிவர்த்தி இல்லை.

இச்செடியை 100 மில்லி நாட்டுப்பசுவின் பால் கலக்கி அருந்தினால் மலட்டுத் தன்மையை போக்கும். உடலுக்கு உறுதியளிக்கும்.

இது விந்துவை கெட்டிப்படுத்தி விந்து முந்துவதை முழுமையாக கட்டுபடுத்துகிறது. மேலும் ஆண்மை சார்ந்த நோய்களையும் குணப்படுத்துகிறது உடலின் சதை பகுதிகளை இறுக்கி வலுச்சேர்க்கும்.

இச்செடியின் விதைகளை புறாக்கள் விரும்பி உண்ணும் ஓர் தானியமாகும். இதனால் புறாவின் உடல் பகுதி இறுகி வலுவாக காணப்படும்.

தாதரா செடியை பசுக்கள் விரும்பி உண்ணுவதால் அதன் பாலே குழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்யும்.

அயல்நாட்டு மாட்டுப்பால் ஆண் பெண் மலட்டுத்தன்மையை உண்டாக்கும். மனிதனால் செயற்கையாக் உருவாக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஒரு நோயை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்கள் உருவாக காரணமாகிறது. ஆனால் இயற்கையால் உருவாக்கப்பட்ட மூலிகை ஒரு நோய்க்காக சாப்பிடும் போது அதை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்களை குணமாகச் செய்கிறது.

click me!