உங்களுக்குத் தெரியுமா? தினமும் பாலும் உருளைக்கிழங்கும் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான அனைத்தும் சத்துகளும் கிடைத்துவிடும்…

Asianet News Tamil  
Published : Oct 07, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தினமும் பாலும் உருளைக்கிழங்கும் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான அனைத்தும் சத்துகளும் கிடைத்துவிடும்…

சுருக்கம்

medical benefits of potato


 

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உருளைக் கிழங்கு. அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கல்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியனவையும் உள்ளன.

சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும் உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்போஹைடிரேட்டுகள் மாவுப்பொருளும் சர்க்கரையும் உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன.

வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப் பயன்படும் காய்கறி இதுதான். அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது உருளைக்கிழங்கு.

உருளைக் கிழங்கை சாப்பிட்டதும், அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குபடுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான். சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2 கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது.

பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது இரவில் பசியினால் அலறாது நிம்மதியாகத் தூங்கும்.

அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும் போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்த நிலையில்தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப்பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது.

கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில்தான் அதிக அளவு ஊட்டச்சத்தும், புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake