
குழந்தை பிறப்பை வியாபாரமாக்கும் “கருத்தரிப்பு மையங்கள்”..!வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகள்
குழந்தை இல்லாத தம்பதிகளை இந்த சமூதாயம் எப்படி பார்க்கும் என்பது ஊர் அறிந்த உண்மை
திருமணமான தம்பதிகள் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை என்றால், இந்த சமூதாயம் அவர்களை பார்த்து கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாமல்,சிகிச்சை எடுத்துகொள்ள மருத்துவமனையை நாடுகின்றனர்
பெர்டிலிட்டி சென்டருக்கு செல்லும் தம்பதிகளை சோதிக்கும் மருத்துவர்களோ,எதையும் விளக்கமாக கூறாமல்....நேரடியாக சிகிச்சைக்கு செல்கின்றனர்.
அதாவது குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு காரணம் ஆணிடமும் இருக்கலாம் அல்லது பெண்ணிடமும் இருக்கலாம்.
ஆண்களை பொறுத்தவரை .....
ஆண்மைக்குறைவு
உயிரணு குறைபாடு
புகை பிடித்தல்
எடை குறைதல்
குடிப்பழக்கம் கொண்டவர்கள்
லைப் ஸ்டைல் மாற்றம்
ஹார்மோன் பிரச்னை
இது போன்று பல பிரச்னை சொல்லலாம்..
பெண்களை பொறுத்தவரை..
கருப்பை கோளாறு
ஹார்மோன் பிரச்னை
கருமுட்டை வளர்ச்சி இல்லாமல் இருப்பது
கருப்பையில் நீர் கட்டி இருப்பது
மாதவிடாய் சுழற்சி
இது போன்ற பல பிரச்சனைகளை சொல்லலாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
குழந்தை இல்லாமல் மருத்துவமனைக்கு வரும் போது அவர்களை சோதிக்கும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு இயற்கையான முறையிலேயே கருத்தரிக்கும் வாய்ப்பு இருந்தால் அதனை அந்த தம்பதியிடம் புரிய வைக்கலாம்.
குறிப்பிட்ட காலம் கடந்து செல்லும் போதும், அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால், மாற்று முறை என்ன? என்பதையும் செயற்கையாக முறையில் கருத்தரிப்பு செய்து, அதனை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையின் வளர்ச்சியை கவனிப்பது....
ஒரு வேளை செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யும் போது,அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த சிகிச்சையால் குழந்தையை கண்டிப்பாக பெற்றெடுக்க முடியுமா ?
பெயிலியர் ஆனால் என்ன செய்வது ?
இது போன்ற பல பிரச்சனைகளை தம்பதிகளுக்கு எடுத்துரைத்து பின்னர் கருத்தரிப்பு முறையில் இறங்குவது நல்லது
மேலும், குழந்தைகாக எவ்வளவு செலவு செய்வதற்கும் ரெடி என தம்பதிகள் சொல்லும் வார்த்தையிலேயே.....சில மருத்துவர்கள் சுயலாபம் காண்கின்றனர். இதற்காக பல லட்சம் வசூல் செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதாவது மருதுவர்களிடையே தொழில் போட்டியே நிலவுகிறது ..
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 130 கருத்தரிப்பு மையங்கள் உள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.......
குழந்தை இல்லாத தம்பதிகள் ஒருபக்கம்....சுயலாபம் காணும் கருத்தரிப்பு மையங்கள் ஒருபக்கம்.....
மொத்தத்தில் லட்சகணக்கில் பணம் சம்பாதிப்பது டாக்டர்களின் வேலையாக உள்ளது.....
அப்படி இருந்தும் குழந்தை கிடைத்தால் பரவாயில்லை தான்....ஆனால் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளது என தெரிந்தும் அதற்கான சரியான சிகிச்சை முறையை அளிக்காமல்,பணத்தை பெறுவதற்காக, அவர்களுக்கு தேவை இல்லாத ஹார்மோன் சிகிச்சை அளித்து,அந்த பெண்ணிற்கு உடல் நலத்திலும் மேலும் சில பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை மனதில் வைத்துகொண்டு மருத்துவர்கள் செயல்பட்டால் நல்லதாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தும்....
சமீபத்தில் மருத்துவர்கள் கூட தொழில் போட்டிக்காக, கருத்தரிப்பு மையம் வைத்துள்ள தாமஸ் என்ற மருத்துவரே ... சக மருத்துவரை கூலி படை விட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம் வியாபார மையமாகும் கருத்தரிப்பு மையங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி....