இரவு தூங்கும் போது அதிகம் வியர்க்குதா? இது தான் காரணம்

Published : May 08, 2025, 05:59 PM IST
இரவு தூங்கும் போது அதிகம் வியர்க்குதா? இது தான் காரணம்

சுருக்கம்

பகல் பொழுதில், வெப்பம் அதிகரிக்கும் போது வியர்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால் சிலருக்கு இரவில் என்ன தான் ஏசி, ஃபேன் போட்டு படுத்தாலும் கூட வியர்க்கும். உடலில் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சனைகள், பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

சிலருக்கு இரவில் தூங்கும்போது அதிக வியர்வை சுரப்பது ஒரு தொல்லையாக இருக்கலாம். இது வெளிப்புற வெப்பநிலை அல்லது போர்வையின் காரணமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து இரவில் அதிக வியர்வை ஏற்பட்டால், அது உங்கள் உடலில் சில அடிப்படை சுகாதார பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 

தைராய்டு சுரப்பி மிகையாக செயல்படுதல் :

தைராய்டு சுரப்பி உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராய்டு மிகையாக செயல்படும்போது (hyperthyroidism), இந்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உடல் வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக இரவில் அதிக வியர்வை ஏற்படலாம். தைராய்டு மிகையாக செயல்படுவதன் மற்ற அறிகுறிகளில் படபடப்பு, எடை இழப்பு, அதிகரித்த பசி, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை அடங்கும். இரத்த பரிசோதனை மூலம் தைராய்டு ஹார்மோன்களின் அளவை சரிபார்ப்பதன் மூலம் இந்த நிலையை கண்டறிய முடியும். 

குறைந்த இரத்த சர்க்கரை அளவு :

நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அல்லது பிற மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து வியர்வையை அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும், மருத்துவர் பரிந்துரைத்த உணவு மற்றும் மருந்து முறைகளை பின்பற்றுவதன் மூலமும் இதை நிர்வகிக்கலாம்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் :

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது தூக்கத்தின்போது சரியாக மூச்சு விட முடியாத சூழ்நிலையில், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையலாம். இதனால் உடலில் வியர்வை சுரக்கலாம். இதற்கு CPAP இயந்திரம், வாய்வழி கருவிகள் அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் உள்ளன.

அமில எதுக்களிப்பு :

இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்குள் பின்னோக்கி வரும்போது அமில எதுக்களிப்பு ஏற்படுகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் பிற அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில், இந்த நிலை இரவில் வியர்வையைத் தூண்டலாம்,  உணவு முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் உணவுக்கு பிறகு சிறிது நடைபயிற்சி செய்யலாம். 

மருந்துகளின் பக்க விளைவுகள் :

சில மருந்துகள் பக்க விளைவுகளாக இரவில் வியர்வையை ஏற்படுத்தலாம். ஆண்டிடிரஸன்ட்கள், சில வலி நிவாரணிகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் போன்ற மருந்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் புதிய மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு இரவில் அதிக வியர்வை ஏற்பட்டால், அது பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அவர்கள் மருந்தின் அளவை மாற்றவோ அல்லது வேறு மருந்தை பரிந்துரைக்கவோ செய்யலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்