Ladyfinger: இளவயதில் வயதான தோற்றமா? வெண்டைக்காயை இப்படி யூஸ் பன்னுங்க!

Published : Nov 11, 2022, 04:01 PM IST
Ladyfinger: இளவயதில் வயதான தோற்றமா? வெண்டைக்காயை இப்படி யூஸ் பன்னுங்க!

சுருக்கம்

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில், பலருக்கும் குறைந்த வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இளமையிலேயே வயதானது போன்ற தோற்றம் வருவதற்கு, அடுக்கடுக்கான பல காரணங்கள் உள்ளது.  

வயதான தோற்றம்

நாகரிகம் என்ற பெயரில் இன்றைய இளம் தலைமுறையினர், இரசாயனங்கள் அதிகம் நிறைந்த சருமப் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது தான் வயதான தோற்றம் பெற மிக முக்கிய முதல் காரணம் ஆகும். சூரிய ஒளிக் கதிர்களின் தாக்கமும், மேலும் சில காரணங்களாக கருதப்படுகிறது. இதனைப் போக்குவதற்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தும் கூட வயதான தோற்றத்தை சரி செய்ய முடியும். இதற்கு வெண்டைக்காய் பெரிதும் உதவி புரிகிறது. தற்போது வெண்டைக்காயை எப்படி பயன்படுத்தி வயதான தோற்றத்தை போக்க முடியும் என்று காண்போம்.   

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 5
தண்ணீர் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

எப்படி பயன்படுத்த வேண்டும்

வெண்டைக்காயை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

Seaweed: கடற்பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் அற்புதப் பலன்கள்!

பின்னர், ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதில் வெண்டைக்காயை சேர்த்து, பத்து நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து, சூடான வெண்டைக்காயை ஆறவைத்து, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை  சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்தக் கலவையை பேஸ்பேக்காக முகத்தில் தடவி, ஏறக்குறைய 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

வெண்டைக்காய் பேஸ்பேக்கின் பலன்கள்

வறட்சியான சருமம் இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் பேஸ்பேக்கை பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் நீக்கிவிட்டு, பொலிவையும், அழகையும் அளித்து இளமையாக வைத்திருக்க உதவும்.   

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?