மாம்பழத்தை போன்றே மா இலையிலும் அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு...

First Published Jun 23, 2018, 4:41 PM IST
Highlights
Like mango there are so many medicinal properties in the mango leaf.


மாம்பழத்தில் தான் சத்து இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். மா இலையிலும் நிறைய சக்தி இருக்கிறது. 

மா இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்...

விக்கல்:

புதிய மா இலை சாறு மற்றும் கொத்தமல்லி சாறு இரண்டையும் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் அடிக்கடி விக்கல் வருதல் நின்றுவிடும்.

காலரா:

15 கிராம் மா இலையை 500 மி.லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நான்கில் ஒரு பங்கு ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டு தினமும் இரு முறை குடித்து வர காலரா நீங்கும்.

கல்லீரல் பலவீனம்:

ஐந்து கிராம் நிழலில் காயவைத்த மா இலையை 250 மி.லி தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி பருக வேண்டும்.

சர்க்கரைநோய்:

புதிய மா இலையை எடுத்து நிழலில் காயவைக்க வேண்டும். பிறகு அதை நன்றாக பொடிசெய்துகொள்ள வேண்டும். பிறகு அந்த மா இலை பொடியை ½ -1 தேக்கரண்டி தண்ணீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். அல்லது புதிய மா இலையை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடிக்க வேண்டும்.

வாந்தி மற்றும் குமட்டல்:

மா இலை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வாந்தி மற்றும் குமட்டல் நின்றுவிடும்.

பதட்டம் மற்றும் மந்தத் தன்மை:

மா இலை சாறு இரண்டு அல்லது மூன்று டம்ளர் ஊற்றி குளித்து வர வேண்டும். இந்த மூலிகை குளியல் நிவாரணத்தில் பதட்டம் மற்றும் மந்தமான தன்மை நீங்கும்.

காது வலி:

மா இலையின் சாற்றை ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு சூடுபடுத்தி காதில் விட வேண்டும். இவ்வாறு செய்தால் காது வலி விரைவில் குணமடையும்.

click me!