இரவில் தூங்கும் போது எச்சில் வடிகிறதா? இதுதான் காரணம்..!!

By Dinesh TG  |  First Published Jan 24, 2023, 7:02 PM IST

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழும் போது சில நேரங்களில் வாயோரங்களில் எச்சில் வடிவது சங்கடத்தை ஏற்படுத்தும். ? இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
 


இன்றைய சூழலில் உறங்கும் போதாவது நிம்மதியை தேடுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அப்போதும் சில தொந்தரவுகள் ஏற்படுவதுண்டு. பக்கத்தில் படுப்பவர் குறட்டை விடுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது, வாயில் எச்சில் வடிவது போன்ற பிரச்னைகள் நிம்மத்தியான உறக்கத்தை முற்றிலுமாக குலைத்துவிடும். வாயில் இருந்து உமிழ்நீர் வடிவது, பொதுத் தமிழில் துளிர்த்தல் என்று குறிப்பிடப்படுகிறது.

நாம் தூங்கும் போது, நமது முகத் தசைகளும் அனிச்சையாக ஓய்வெடுக்கின்றன. இதனால் உமிழ்நீர் குவிந்து, சில சமயங்களில் அது வாயிலிருந்து வெளியேறுகிறது. அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதை மருத்துவ மொழியில் சியாலோரியா என்றும் ஹைப்பர்சலைவேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. தூங்கும் போது எச்சில் வடிதல் இயல்பானது. சில நேரங்களில் உமிழ்நீர் நரம்பியல் நிலை, தூக்கக் கோளாறு அல்லது பிற உடல்நலக் கோளாறுகளால் ஏற்படுகிறது. பக்கவாதம், பெருமூளை வாதம் அல்லது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற பிரச்னைகளால் கூட எச்சில் வடியும். 

Latest Videos

undefined

தூக்க நிலை

உமிழ்நீர் என்பது ஈர்ப்பு விசையுடன் தொடர்புடையதாகும். நமது தூங்கும் நிலையை பொறுத்து தான் எச்சில் வடிகிறது. பக்கவாட்டில் அல்லது குப்புறப் படுத்து தூங்கும் போது உமிழ் நீர் வடிகிறது. குறிப்பாக வாய் வழியாக சுவாசிப்பது, சைனஸ் பாதைகள் தடைபடுவது போன்றவை ஏற்படும் போது திரட்டப்பட்ட உமிழ்நீர் வாயில் இருந்து வெளியேறும்.

சைனஸ் அடைப்பு

சளி பிடித்தால் மூக்கில் அடைப்பு ஏற்படுவது சகஜம். உங்களுக்கு ஏற்கனவே குறுகிய துவாரங்கள் இருந்து, அடைப்பு ஏற்பட்டால் அது உமிழ்நீரை வடியச் செய்துவிடும். குறிப்பிட்ட பிரச்னையை கொண்டவர்களுக்கு சாதாரண நபர்களை விடவும், அதிகளவு உமிழ்நீர் வெளியேறும். இவர்கள் நீண்ட நேரம் தூங்க நேர்ந்தால், அதிகளவு உமிழ்நீரை வெளியேற்றிவிடக்கூடும்.

இரைப்பை குடல் பிரச்னை

செரிமானக் கோளாறு இருந்தாலும் உமிழ் நீர் அதிகளவு சுரந்து வாய் வழியாக வெளியேறும். சாப்பிடும் உணவு, உணவுக்குழாயின் மீண்டும் பாயும் போது புறணி சேதப்படுகிறது. உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும் தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு உள்ளிட்டவையும் வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

கொலஸ்ட்ரால் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

பக்கவிளைவு

நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டால், உமிழ்நீர் வெளியேறும் வாய்ப்பு அதிகம். ஆன்டிசைகோடிக் மருந்துகள் மற்றும் அல்சைமர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அதிகப்படியான உமிழ்நீரை வெளியேற்றும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூச்சுத்திணறல்

நீங்கள் தூங்கும் போது மூச்சுத்திணறல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். சில நேரங்களில் தூங்கும் போது சுவாசத்தை நிறுத்துவது தூக்கத்தை கெடுக்கும். இதற்கு காரணமும் உமிழ்நீர் அதிகளவு சுரப்பது தான். தூக்கத்தில் மூச்சுத்திணறல் மிகவும் தீவிரமானது மற்றும் சரியாக கண்டறியப்பட பிரச்னையாகும். உரத்த குறட்டை, பீதியில் எழுந்திருத்தல், மூச்சுத் திணறல், இரவில் பார்வைக் குறைபாடு, கவனம் செலுத்துவதில் சிரமம், விழித்திருக்கும்போது தூக்கம், விழித்திருக்கும்போது தொண்டை வலி, வாய் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.
 

click me!