ஆங்கிலத்தில் Soul Friend என்று சொல்லப்படுவதுண்டு. இதை தமிழில் ஆத்ம துணை என்று குறிப்பிடலாம். அதாவது Soul Friend என்றால் நட்பை பற்றியது அல்ல. காதல், வாழ்க்கைத் துணையை உயர்த்தி சொல்வதாகும்.
உறவை நம் அருகிலேயே வைத்திருந்தால், சீக்கரம் சலித்து போய் விடும். நெருங்கினால் தொலைவாக போய்விட வேண்டும், தொலைவில் இருந்தால் நெருங்க வேண்டும். இதுதான் உறவுகளுக்கான கோட்பாடு. ஒருவரை சந்திக்கும் போதே, அவரை ‘ஆத்ம தோழன் / தோழி’ என்று சிலர் எண்ணிவிடுவது உண்டு. இதன்காரணமாக அந்த உறவில் விரிசல் ஏற்படும் போது, அதுவொரு பெரிய காரியமாக எடுத்துக்கொண்டு பேசுவதும் உண்டு. ஒரு உறவில் காதல் முதலில் வர வேண்டும் என்று பலர் நம்பலாம். ஆனால் காதல் என்பது உறவில் இருக்கும் ஒரு நேர்மை மட்டுமே. அதை தம்பதிகளும் காதலர்களும் கண்டறிவது எப்படி , என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நட்பு
ஒரு காதல் உறவில் "நண்பன்" என்ற வார்த்தை சிலருக்கு அசவுகரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையான காதல் உறவில் சிறப்பான தோழாமை என்பது இருக்க வேண்டும். அதற்கு உங்களுடைய துணை சிறந்த நண்பராக அல்லது தோழியாக இருக்க வேண்டும். அப்படியொரு துணை கிடைப்பது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் உறவு என்றென்றும் நீடித்து இருக்கும்.
பரிமாற்றம்
நீங்கள் ஒருவருடன் ஆழமான பிணைப்பைக் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் தனது உணர்வுகள், அதுசார்ந்த நீட்சி உள்ளிட்ட எல்லா குணநலன்களும் தெரிந்து வைத்திருப்பார். சில நேரங்களில் அவர்களின் முகம், கண்களை பார்ப்பதன் மூலம், அந்த நபருடைய உணர்வுகளை கண்டறிய முடியும். இதுபோன்ற உணர்வுசார்ந்த பரிமாற்றம் இருக்கும் போது, அந்த நபர் தாராளமாக நீங்கள் ஆத்ம துணை என்று அழைக்கலாம்.
நேர்மை
உங்களுக்கான ஆத்ம துணையை நீங்கள் கண்டறிந்த பிறகு, அந்த உறவில் நேர்மையை பின்பற்ற வேண்டும். உணர்வுகள் சார்ந்த விஷயத்தில் அவர்களிடம் பாசாங்கு செய்ய வேண்டியது கிடையாது. இதன்மூலம் உங்களுடைய உண்மையான ஆளுமை மற்றும் உணர்வுகள் வெளிப்படும். இது உறவின் கட்டமைப்புக்கு சிறந்த அடித்தளமாக இருக்கும்.
ஈர்ப்பு
ஒரு உணர்வில் ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் ஈர்ப்பு மிகவும் முக்கியமானது. அத்தகைய ஈர்ப்பை ஒருவர் மீது உணரும் போது, அதை உரிய முறையில் வெளிப்படுத்துவது முக்கியம். ஒரு நல்ல அன்பான உறவில் இருக்கும்போது, அந்த நபரின் அதிர்வுகள் துணையை ஈர்க்கும். அதனால் எதிர்மறையான எண்ணங்கள் மறையும். அப்படிபப்ட்ட உணர்வுக்கும், அந்த ஈர்ப்பை ஏற்படுத்திய நபருக்கும் மதிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
பலவீனம்
உங்களுடைய துணையின் பலவீனத்தை உணர்ந்துகொள்வது மட்டுமில்லாமல், அதை ஏற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியம். உலகில் யாரும் சரியானவர்கள் இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் துணையின் பலவீனம் உங்களுக்குத் தெரிந்தாலும், அவரை இன்னும் நேசிப்பீர்களானால், அது காதலை உறுதிப்படுத்தும். மேலும் அந்த உறவில் நேர்மையும் உண்மையும் அதிகரிக்கும்.
காதலருக்குள் குறுஞ்செய்தி பரிமாற்றத்தின் விளைவு- இப்படித்தான் இருக்கும்..!!
மரியாதை
உங்கள் துணைக்கு என்று தனிப்பட்ட மரியாதை மற்றும் மதிப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் முன்னிலையில் அல்லது குடும்பத்தினர் முன்பாக என்றும் தரக்குறைவாக நடத்தக்கூடாது. உங்கள் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளதோ, அதே அளவு உங்களது துணை மீதும் இருப்பது முக்கியம். உறவுக்கு இடையில் மரியாதையான உணர்வு இருந்தால், அது நல்ல தாம்பத்தியத்தை கட்டமைக்கும்.