காதல் ஒரு அழகான உணர்வு என்பதால் தான், நாம் அனைவரும் காதலை கொண்டாடுகிறோம். ஆனால் எல்லோராலும் காதலை வெற்றிக்கரமாக கொண்டு செல்ல முடியாது. எனவே, எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் ஒரு சரியான மற்றும் மகிழ்ச்சியான உறவை விரும்புகிறார்கள். ஆனால் உறவில் எல்லாம் எப்போதும் சரியாக இருக்காது. சில சமயங்களில் காரணமே இல்லாமல் தம்பதிகளுக்கு இடையில் சண்டை வரும். இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படும் போது உறவு மோசமடைகிறது. எனவே உறவில் இருக்கும் ஆண் மற்றும் பெண் இருவரும் அனுசரித்து வாழ்வது முக்கியம். ஒருவர் மற்றவரின் மனதை புண்படுத்தாமல் செயல்படுவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு உறவுக்கும் தொடர்புதான் முக்கியம்.
உங்கள் துணைக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவது பெரும்பாலான சூழ்நிலைகளில் பிரச்னையை உருவாக்குகிறது. குறுஞ்செய்தி இரண்டு நபர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால் சில சமயங்கள் அது தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாட்டையும் உருவாக்கிறது. எனவே, உங்கள் துணைக்கு எப்போது செய்தியை அனுப்பவது, எப்போது அனுப்பக்கூடாது உள்ளிட்ட தகவல்களை நீங்கள் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். உங்கள் துணைக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பக்கூடாத சூழல்கள் சில உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.
முதல் டேட்டிங்கிற்கு பிறகு
உங்கள் துணையுடன் முதன்முதலாக டேட்டிங் செல்வது ஒரு சிறப்பான அனுபவம் தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி அனுப்ப விரும்புகிறார்கள். ஆனால், இப்படி டேட்டிங் போன உடனே குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தால், ஆரம்பத்திலேயே உறவில் சலிப்பு உருவாகத் துவங்கும். படிப்படியாக இருவரும் ஒருவரையொருவர் அந்நியப்படுத்தும் நிலைக்கு வரலாம்.
கோபமாக இருக்கும்போது
உங்களுடைய துணை கோபமாக இருக்கும்போது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம். நீங்கள் ஒரு மோசமான மனநிலையில் இருக்கும்போது நீங்கள் ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமான விஷயங்களைச் சொல்லலாம், அது மேலும் காயங்களை அதிகரிக்கும். இதனால் நீங்கள் இருவரும் பிரிந்து செல்லும் சூழல் உருவாகலாம்.
இதையும் படிங்க: அசைவ உணவுகளால் எலும்பு பாதிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்
பிஸியாக இருக்கும்போது
காதலில் இருப்பவர்கள் தங்கள் துணைக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். ஒருவேளை காதலி அல்லது காதலன் பிஸியாக இருக்கலாம், அதனால் தொடர்ந்து வரும் குறுஞ்செய்திக்கு பதிலளிக்க முடியாமல் போகும். இதனால் குறுஞ்செய்து அனுப்பவருக்கு மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இறுதியில் உறவை சேதப்படுத்தும். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்தைக் கொடுங்கள். இது உறவை வலுப்படுத்த உதவும்.
தவறவிட்ட குறுஞ்செய்திக்கான பதில்
நீங்கள் தவறவிட்ட போதெல்லாம் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப தேவையில்லை. ங்கள் துணையை அடிக்கடி பார்க்க முடியாதபோது அவரை நீங்கள் மிஸ் பண்ணுவதாக தோன்றும். இது நடக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், உறவு மோசமாகிவிடும். காதலருக்குள் அந்த ஏக்கம் இருக்கவேண்டும், காதலுக்கும் அந்த இடைவேளி தேவைப்படுகிறது. ஒரு விஷயம் நினைத்த உடனே கிடைத்துவிட்டால், அதனுடைய மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விடும். அதை மறந்துவிடாதீர்கள்.
இதையும் படிங்க: காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம்.. கனடா பூங்கா செய்த காதலர் தின விளம்பரம்