பெண்கள் நலமுடன் இருப்பதற்கு குறிப்பிட்ட 5 வகையான ஆண்களை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வுலகில் பல வகையான மனிதர்கள் உள்ளனர், அதில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். நல்லவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தனக்காவும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் சேர்ந்து சிந்திப்பார்கள். பொதுவாகவே பெண்களுக்கு அனைவருடைய தேவையை அறிந்து செயல்படும் ஆண்களை மிகவும் பிடிக்கும். தன்னுடைய விருப்பதுக்கு ஏற்ப ஆண்களை பெறும் பெண்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் தான். அதேசமயத்தில் அதற்கு எதிரான குணம் படைத்தவர்களுடனும் பெண்கள் வாழ நேரிடுகிறது. அவர்களிடம் காணப்படும் எதிர்மறை ஆற்றல் பெண்ணின் நிம்மதியை அழித்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பெண்களை விட்டு விலக வேண்டும் அல்லது பெண்கள் அவர்களை நெருங்காமல் இருக்க வேண்டும். அந்த வகையில் பெண்கள் நலமுடன் இருப்பதற்கு குறிப்பிட்ட 5 வகையான ஆண்களை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
சுயநலமான ஆண்
தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிற மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டாத ஒரு பையனுடன் நீங்கள் இருந்தால், வாழ்க்கை சிறக்காது. அந்த நபரின் தேவையை பூர்த்தி செய்யவே நீங்கள் இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வார். உலகிலேயே தான் மிகப்பெரிய பையன் என்கிற ஈகோ அவர்களிடம் இருக்கும். அப்படியொரு எண்ணத்துடன் இருப்பவர்களிடம் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாது. நீங்கள் ஏன் அப்படிப்பட்ட ஒருவருடன் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும்? அவருடன் சிறப்பான எதிர்காலம் அமைவதற்கான வாய்ப்பு குறைவு என்றால், உடனடியாக அந்த உறவை விட்டு வெளியேறிவிடுங்கள்.
பொய் மூட்டை ஆண்
நீங்கள் ஒருவரை நம்ப முடியாதபோது, அவர்மீது உங்கள் உணர்வுகளை முதலீடு செய்வது மிகவும் சவாலானது. அந்த நபர் உங்கள் காதலராகவோ அல்லது கணவராக இருந்துகொண்டு, தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு இருந்தால், அவரைப் போன்ற ஒருவருடன் இருக்க உங்கள் முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் போது பல வாக்குறுதிகளை அந்த நபர் கொடுக்காமல். ஆனால் அப்படிப்பட்ட நபர்கள் என்றுமே திருந்துவது கிடையாது என்பதே உண்மை. உங்களை எப்போதும் இருட்டி வைத்து, சுதந்திரமாக ஏமாற்றுவார். அப்படிப்பட்ட நபருடன் வாழ்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
மேலோட்டமான ஆண்
நமக்கு ஒருவரை பிடித்துப்போனால், அந்த உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் நீங்கள் விரும்பும் நபர் அதற்கு வாய்ப்பே தரவில்லை என்றால், சுதாரிப்பது மிகவும் முக்கியம். காதல் வாழ்க்கை மீது தீவிரத்தை காட்டாத நபர்கள், எல்லாவற்றையும் மேலோட்டமாக வைத்திருப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். தன்னை பற்றி எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். உங்களை தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு தயங்குவார்கள். இந்த நடத்தையை வெளிப்படுத்தும் நபருடன் நீங்கள் இருந்தால், அவரை விட்டு உடனடியாக விலகிவிடுங்கள்.
இதையும் படிங்க: பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் வரும் நோய்த்தொற்று.. எந்த உணவுகள் காரணம் தெரியுமா?
பிளேபாய் ஆண்
டேட்டிங் காட்சியில் பலவிதமான நபர்களை நாம் கடக்க நேரிடும். நீங்கள் பலவிதமான ஆண்களை சந்திக்க நேரிடும். அதேபோன்று தான் ஆண்களுக்கும். அதனால் ஒரு பெண்ணுடன் பழகும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுவது சகஜமான ஒன்று. எனினும் அவர்கள் எந்த பெண்ணுக்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை இரண்டு பெண்களுடனும் ஒரேநேரத்தில் பழகி வரும் ஆண்களிடம் எப்போதும் பெண்கள் நெருங்கக் கூடாது. அவர்களை விட்டு விலகுவது தான் சரியான முடிவு. உணர்வுகளுக்கும் காதலுக்கும் மதிப்பு கொடுக்காத ஆண்கள் பெண்களுக்கு தேவையே இல்லை. உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பழகும் ஆண்களை கண்டறிந்து வாழ்க்கையை வாழுங்கள்.
ஆதிக்கம் காட்டும் ஆண்
என்ன அணிய வேண்டும், அல்லது எப்படி எதையும் செய்ய வேண்டும் என்று பெண்களிடம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆண்கள் நச்சுத்தன்மை கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நபர்களுடன் இருப்பது இறுதியில் வேதனையாக தான் இருக்கும். உறவில் ஆதிக்கம் காட்டும் ஆண்களிடம் பொறாமை அதிகம் இருக்கும், அதேசமயத்தில் எளிதாக சந்தேகப்பட்டுவிடுவார்கள். தான் தவறு செய்திருந்தாலும் கூட, உங்கள் மீது தான் பழி சொல்வார்கள். இவர்களிடம் அன்பு, கருணை, காதல் எல்லாம் இருக்கவே இருக்காது. உங்களுடைய காதலர் இதுபோன்ற குணாதிசியங்களுக்குள் பொருந்துவார் என்றால், உடனடியாக அவரை விட்டு விலகிவிடுங்கள். அது ஒன்று மட்டுமே தீர்வு.
இதையும் படிங்க: வீடே அதிரும் குறட்டையில் இருந்து விடுபடனுமா? இப்படி 'டீ' போட்டு குடிச்சாலே போதும்