கஞ்சி குடிப்பது யாருக்கு எல்லாம் ஆபத்து!!

Published : Feb 05, 2025, 01:52 PM ISTUpdated : Feb 05, 2025, 01:58 PM IST
கஞ்சி குடிப்பது யாருக்கு எல்லாம் ஆபத்து!!

சுருக்கம்

குளிர்காலத்தில் கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம், அசிடிட்டி அல்லது சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் கஞ்சியை குறைந்த அளவில் அல்லது முழுமையாகவோ குடிக்கக்கூடாது.

குளிர்காலத்தில் கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், அசிடிட்டி அல்லது சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் கஞ்சியை குறைந்த அளவில் அல்லது முழுமையாகவோ குடிக்கக்கூடாது.

Kanji Drink: இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் பீட்ரூட், கேரட், கடுகு, உப்பு, ஓமம் போன்ற பொருட்களை சேர்த்து கஞ்சி செய்யும் ரெசிபி வைரலாகி  வருகிறது. குளிர்காலத்தில் கஞ்சி குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். ஆனா, சிலருக்கு அது தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் கஞ்சி குடிக்கக் கூடாதுன்னு பார்க்கலாம்.

கஞ்சி குடிக்கிறவங்க இதை கவனிக்கணும்

dr.sugandha07 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சி குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றி கூறி இருக்கிறார்.  இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நீங்களும் கஞ்சி குடிக்கிறவங்களா இருந்தா, இதைப் படிச்சிட்டு குடிங்க.

இந்த இடுகையை Instagram-இல் காண்க

Sugandha Sharma (@dr.sugandha07) பகிர்ந்த இடுகை

எப்ப வேணாலும் கஞ்சி குடிக்கக் கூடாது

கஞ்சி குளிர்ச்சியானது என்பதால் எப்ப வேணாலும் குடிக்கக் கூடாது. அப்படிக் குடிச்சா உடம்புக்கு ஆகாது. பகலில்  மட்டும் குடிங்க. சளி, இருமல் இருக்கறவங்க கஞ்சி குடிக்கக் கூடாது.

நீளமான கூந்தல் வளர அரிசி, கிராம்பு நீர் மேஜிக்; எப்படி பயன்படுத்துவது?

உயர் ரத்த அழுத்தம் உள்ளவங்க கவனமா இருங்க

உயர் ரத்த அழுத்தம் உள்ளவங்க கஞ்சியைக் குறைவா குடிக்கணும். ஏன்னா, கஞ்சியில உப்பு அதிகமா இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

வயிற்றில் புண் இருப்பவர்கள்:

தொண்டை அல்லது வயிற்றில் புண் இருக்கிறவர்கள் கஞ்சி குடிக்கக் கூடாது. கஞ்சி புளிப்பா இருக்கும். இது புண்ணை எரிச்சலாக்கும்.

அசிடிட்டி, வாயுத் தொல்லை இருப்பவர்கள்:

கஞ்சி நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதனால அதற்கு அசிடிட்டியை அதிகரிக்கும் குணம் இருக்கிறது.  அசிடிட்டி, வாயு அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவங்க அதிகமா குடிக்கக் கூடாது.

சிறுநீரகப் பிரச்சினை இருப்பவர்கள்:

கஞ்சி போன்ற நொதித்த உணவுகளில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது சிறுநீரக நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.

இரவு தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? ஆய்வுகள் சொல்வது இதுதான்!

எவ்வளவு கஞ்சி குடிக்கலாம்?

சிலர் ஒரு டம்ளர் நிறைய கஞ்சி குடிக்கறாங்க. ஆனா, அரை டம்ளருக்கு குறைவாத்தான் குடிக்கணும்.

கஞ்சி குடிக்கறவங்க இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு குடிக்க வேண்டும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?