Onion: ஒரே ஒரு துண்டு வெங்காயம் போதும்: எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும்!

By Dinesh TGFirst Published Dec 25, 2022, 10:28 AM IST
Highlights

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ, நம் விருப்பப்படி எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இருப்பினும், பச்சையாக அப்படியே சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்து அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.
 

அன்றாட சமையலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது வெங்காயம். உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும் வெங்காயத்தில், பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும், சாம்பாரில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது‌. இது சாம்பாரில் சுவையைக் கூட்டுவதற்கும் உதவி புரிகிறது. வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் இருக்கும் அலைல் புரோப்பைல் டை சல்பைடு தான் காரணம். இது தான் வெங்காயத்தின் நெடிக்கும் மற்றும் வெங்காயத்தை நறுக்கும் போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ, நம் விருப்பப்படி எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இருப்பினும், பச்சையாக அப்படியே சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்து அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.

வெங்காயத்தின் பலன்கள்

  • வெங்காயத்தை பச்சையாக அப்படியே கடித்து சாப்பிட்டால், வாய்ப் புண் மற்றும் கண்வலி குணமடையும்.
  • வெங்காயத்தை தினந்தோறும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி மற்றும் பார்வை மங்குதல் போன்ற சிறு நோய்கள் குணமடையும்.
  • உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டால், வெங்காயத்தை வதக்கி ஒரு சில துண்டுகளை காயத்தில் வைத்து வந்தால் வெட்டுக் காயங்கள் வெகு விரைவில் குணமாகி விடும்.

Turmeric: மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

மலச்சிக்கல்

  1. வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சீராகி, உடல் நலம் மேம்படும்.
  2. வெங்காயம் வயிற்றில் இருக்கும் சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்திற்கும் இது உதவி புரிகிறது.
  3. தலையில் திட்டுத் திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்தால், சிறு வெங்காயத்தை இரு துண்டுகளாக நறுக்கி தேய்த்து வந்தால் தலைமுடி வளரும்.  
  4. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், வெங்காயச் சாற்றை தினந்தோறும் மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சுத்தமாகும். 
  5. தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச் சாற்றை தேய்த்து விட்டாலீ விஷம் ஏறாது. அதேபோல படை மற்றும் தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் விரைவாக நலம் பெறலாம்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெங்காயத்தை நறுக்கிய உடனே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். அதே மாதிரி நறுக்கியவுடன் பச்சையாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால், சுற்றியிருக்கும் அழுக்கை தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். அதாவது, வெங்காயத்தை நறுக்கி அப்படியே வைத்திருத்தல் கூடாது

click me!