Heart Aatack: இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பா? கவனமாக இருங்கள்!

Published : Dec 24, 2022, 10:57 AM IST
Heart Aatack: இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பா? கவனமாக இருங்கள்!

சுருக்கம்

சில ஆய்வு முடிவுகளின் படி மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக தூக்கமின்மை, மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு, பய உணர்வு, கை மற்றும் கால்கள் பலவீனமாதல், மனநிலை மாற்றங்கள் மற்றும் பசியின்மை போன்ற 7  முக்கியமான அறிகுறிகள் காணப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.  

உணவுப் பழக்கம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், 40 வயதை தாண்டியவுடன் மாரடைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றாகி விட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இதனால் பலரும் இறந்து விடுகின்றனர். மாரடைப்பு ஏற்படப் போவதை சில மாதங்களுக்கு முன்னரே, நமது உடல் ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தி விடும். ஆனால் இதனை நாம் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுகிறோம். சில ஆய்வு முடிவுகளின்படி மாரடைப்பு ஏற்படப் போவதை 7 முக்கியமான அறிகுறிகள் உணர்த்துகிறது.

அறிகுறிகள்

சில ஆய்வு முடிவுகளின் படி மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக தூக்கமின்மை, மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு, பய உணர்வு, கை மற்றும் கால்கள் பலவீனமாதல், மனநிலை மாற்றங்கள் மற்றும் பசியின்மை போன்ற 7  முக்கியமான அறிகுறிகள் காணப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினாலே போதும். நோய்கள் எதுவும் நம்மை அண்டாது. மாரடைப்பு வந்த பின் அவதிப்படுவதைக் காட்டிலும், வராமல் தடுப்பது தான் ஆகச் சிறந்தது. அதற்கு முதலில் அனைவரும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள்

பெண்களைப் பொறுத்தவரை மார்புப் பகுதியில் ஒருவித அசௌகரிய உணர்வு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, நெஞ்சில் ஒருவித இறுக்கம், நெஞ்சு வலி மற்றும் கனமாக உணர்தல் போன்றவை ஏற்படும். அப்படியே படிப்படியாக கை மற்றும் கால்கள் பலவீனமடையத் தொடங்கும். இதன் காரணமாக சிலருக்கு பயம், சோர்வு மற்றும் அதிக வியர்வை வெளிப்படும்.

Pasalai Keerai: புதிய இரத்த உற்பத்திக்கு இந்த ஒரு கீரையே போதும்!

பொதுவான அறிகுறியாக நெஞ்சு வலி கருதப்படுகிறது. இருப்பினும், நெஞ்சு வலியுடன் சேர்த்து மூச்சுத் திணறல், உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக உணர்வது, முதுகு அல்லது தாடைப் பகுதியில் வலி ஏற்படுவது போன்றவை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

செய்ய வேண்டியவை

உடல் செயல்பாடுகளை அதிகரிக்கின்ற செயல்களில் ஈடுபட வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சிகளை செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதுபோன்ற சில செயல்களை தொடர்ந்து கடைபிடித்தால், மாரடைப்பு வருவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.   

PREV
click me!

Recommended Stories

Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்
Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!