தக்காளி பல நோய்களுக்கும் அருமருந்தாக திகழ்கிறது. இருப்பினும், தக்காளியை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள கூடாது. அவ்வகையில் யாரெல்லாம் தக்காளியை சாப்பிடக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
நமது அன்றாட சமையலில் ஒரு முக்கியமான காய்கறிகளில் தக்காளியும் ஒன்றாகும். தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது. இவற்றில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகிய சத்துக்கள் போதுமான அளவு நிறைந்துள்ளது. கூடுதலாக இதில் பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், ஃபோலேட், இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளது. ஆகவே தக்காளியை சாப்பிடுவதன் மூலம் நாம் பல வகையான ஊட்டச் சத்துக்களை பெற முடியும்.
தக்காளி பல நோய்களுக்கும் அருமருந்தாக திகழ்கிறது. இருப்பினும், தக்காளியை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள கூடாது. அவ்வகையில் யாரெல்லாம் தக்காளியை சாப்பிடக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
undefined
தக்காளியை யார் சாப்பிடக் கூடாது?
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரகம் செயலிழந்தவர்கள், டயாலிசிஸ் செய்வதற்கு முந்தைய ஸ்டேஜில் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் தக்காளியை எடுத்துக் கொள்ளக் கூடாது.
என்ன ஆபத்தை ஏற்படுத்தும்?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள், தக்காளியை சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், சிறுநீரகம் செயலிழந்து விட்ட காரணத்தால், பொட்டாசியம் வெளியேறாமல் உடலிலேயே அதிகமாக தங்கி விடும். இது இரத்தத்தில் தொடர்ந்து இருப்பதனால், உடலில் நச்சுக்களை உருவாக்கி, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. ஆகவே, பொட்டாசியம் நிறைந்துள்ள தக்காளியை இவர்கள் முழுமையாக தவிர்த்து விட வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு மட்டும் அவர்களுடைய உடல் நிலையைப் பொறுத்து, குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தலாம்.
யாருக்கெல்லாம் தக்காளி நல்லது?
Chili: தினசரி உணவில் அதிகமான காரம் சேர்த்தால் உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்று தெரியுமா?
தக்காளியின் நன்மைகள்
எவ்வளவு தக்காளி சாப்பிடலாம்?
சராசரி மனிதன் தினந்தோறும் 300 முதல் 400 கிராம் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதில் தக்காளியை 100 கிராம் வரையில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரண்டு தக்காளிகளுக்கு சமமாகும்.