Bad Breath: வாய் துர்நாற்றத்தை தடுக்க அசத்தலான டிப்ஸ் இதோ!

By Dinesh TGFirst Published Dec 23, 2022, 12:52 PM IST
Highlights

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நம்மை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் ஒரு பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். பற்களின் இடையே அல்லது நாவின் பின்புறத்தில் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதுபோன்ற பிரச்சனை வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சரியாகப் பல் துலக்காமல் இருப்பது மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

எதனால் ஏற்படுகின்றது?  

வாயில் துர்நாற்றம் உண்டாக வாய் மட்டுமின்றி, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் உண்டாகும். உணவுப் பழக்கத்தை தவிர ஆல்கஹால் மற்றும் புகைப் பழக்கத்தால் நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. 

உடலில் உள்ள பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் வாயில் துர்நாற்றம் வருகிறது.

வயிற்றில் அல்சர் இருக்கும் நபர்களுக்கு, வாயில் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பாக்கு போடுதல், புகையிலை, வெற்றிலை மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

தொண்டையில் இருக்கும் டான்சில் சுரப்பியில் இன்பெக்க்ஷன் ஏற்பட்டாலும், வாயில் துர்நாற்றம் உண்டாகும்.  

அவ்வகையில் வாய் தூர்நாற்றத்திற்கு தீர்வு காண எந்த மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

Turmeric: மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்

  • சிறிதளவு புதினா இலைகளை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். இதன் காரணமாக, நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • சிறிதளவு கொத்தமல்லியை உணவு உண்ட பிறகு, வாயில் போட்டு மெல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, பூண்டு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு, கொத்தமல்லி சாப்பிட்டால், வாயில் இருந்து வீசும் பூண்டின் வாசம் நீங்கி விடும்.
  • ஒரு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்லுங்கள். இதன் காரணமாக, நீண்ட நேரம் வாய்ப் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.
  • கிரான்பெர்ரி வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. இது ஈறுகளை வலிமையாக்கி, பல் சொத்தையைத் தடுக்கிறது. இது தவிர, பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. ஆகவே இந்தப் பழம் எங்காவது கிடைத்தால், அதனை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
  • எப்போதெல்லாம் வாய் துர்நாற்றம் வீசுவதை நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போது எல்லாம் ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.
  • வாய் துர்நாற்றம் வீசினால் ஒரு தேக்கரண்டி சோம்பை ஒவ்வொரு வேளை உணவு உண்ட பிறகும், சோம்பை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவது மட்டுமின்றி, செரிமானமும் சிறப்பாக நடக்கும்.
click me!