Joint Pain: மூட்டு வலியைத் தடுக்க இந்த ஒரு உடற்பயிற்சியை செய்தால் போதும்!

By Dinesh TGFirst Published Dec 16, 2022, 11:06 AM IST
Highlights

மூட்டு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதனை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது தான் சிறந்தது. அதற்காக உடற்பயிற்சி என்ற ஒன்று பெரிதும் உதவி புரிகிறது. தற்போது மூட்டு வலியைக் குணப்படுத்தும் உடற்பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை காண்போம். 

வயதாகி விட்டால் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி வருவது எல்லாம் இயல்பு தான். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கும் மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது. இதனால், அவர்கள் பல்வேறு பாதிக்களையும் சந்திக்கின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உடலுழைப்பு குறைந்து போனது தான். அந்த காலத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் உடலுழைப்பை அதிகம் பயன்படுத்தினர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் உடலுழைப்பை தவிர்க்கின்றனர். இதன் விளைவாகத் தான் கை, கால் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது.

உடலுழைப்பு செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் தினந்தோறும் உடற்பயிற்சி செய்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. 

பாடாய்ப்படுத்தும் மூட்டு வலி

இன்றைய காலத்தில் மூட்டு வலி என்பது, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். மூட்டு வலி வந்து விட்டால், அன்றாட வேலைகளைச் செய்வது கூட மிகவும் சிரமமாக மாறி விடும். மூட்டு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதனை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது தான் சிறந்தது. அதற்காக உடற்பயிற்சி என்ற ஒன்று பெரிதும் உதவி புரிகிறது. தற்போது மூட்டு வலியைக் குணப்படுத்தும் உடற்பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை காண்போம். 

Weight Gain: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்: அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

உடற்பயிற்சி செய்யும் முறை

  • ஒரு காட்டன் துணியை விரித்து, மல்லாந்து படுத்துக் கொண்டு, இரு கால்களையும் செங்குத்தாக மடக்கி கொள்ள வேண்டும்.
  • இடது உள்ளங்காலில் ரிங்கை வைத்து, ஹோல்டு செய்ய வேண்டும். பின்பு, வலது காலை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.
  • அதே நேரத்தில், இடது காலை நேராக மேல் நோக்கியபடி 45 டிகிரி கோணத்திற்கு உயர்த்தி விட்டு, வலது புறமாகப் பக்கவாட்டில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
  • இப்படிச் செய்யும் போது ரிங்கின் மறுபுறத்தை இரு கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதைப் போலவே 10 விநாடிகள் வரை இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.
  • இதே மாதிரி வலது காலுக்கும் இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இரண்டு கால்களுக்கும் செய்து முடித்தால் ஒரு செட் கணக்காகும். இந்த உடற்பயிற்சியை ஐந்து முறை செய்யலாம்.  

உடற்பயிற்சியின் பலன்கள்

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதனால், மூட்டு வலி வருவதைத் தடுக்க முடியும்.
  • கால்களில் உண்டாகும் தசைப் பிடிப்புகள் நீங்கி விடும்.
  • உடலில், இரத்த ஓட்டம் சீராக பாய உதவுகிறது.

 

click me!