மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும் காரணங்கள் மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளைப் பேணுவதற்கான 7 எளிய வழிமுறைகள். உடல் எடையைச் சரியாகப் பராமரிப்பது, உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், போதுமான நீர்ச்சத்து மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.
மனித உடலில் இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடத்தை ஜாயின்ட் என்கிறோம். நம் ஒவ்வொரு அசைவுகளுக்கு உடலிலுள்ள எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குறிப்பாக நடை பயிற்சி, எடைத் தூக்குவது, விளையாடுவது என உடலுக்கு எலும்பு ஜாயின்ட் பேருதவியாக இருக்கின்றன. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த மூட்டுகளில் ஏற்படும் வலி அல்லது வீக்கம் ஒரு மனிதனின் மொத்த நிம்மதியையும் கெடுத்து, அவன் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.
மகிழ்ச்சியான வாழ்வுக்கு மன வலுவுடன் உடல் வலுவும் மிக முக்கியம். மனதை ரிலேக்சாக வைத்திருப்பதன் மூலம் மனம் வலுவடையலாம் என்றால், உடல் வலுவுக்கு முறையான உடற்பயிற்சிகளும், நடை பயிற்சிகளும் மிகவும் முக்கியம். இவற்றை தினமும் செய்து ஆரோக்கியமான வாழ்வு பெற வேண்டுமெனில் நம் மூட்டுகளுக்கு வலிமை தேவை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறை, வேலை சுமை போன்ற காரணங்களால் உடல் வலுவுக்கு சவால் இருந்து வருகிறது. இதனால் மூட்டுப் பகுதிகளில் வலி , வீக்கம் என ஆரம்பித்து கீல்வாதம் (arthritis) என்னும் நிலை உருவாகிறது.
ஆரோக்கியத்திற்கு சில வழிகள்:
இப்படி உடல் வலுவுக்கு செக் வைக்கும் வாத நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க சில வழிகள் உண்டு. 7 வழிமுறைகளை கையாள்வதன் மூலம் எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
பால் வேண்டாம்! கால்சியம் நிறைந்த 7 சூப்பர் உணவுகள்
சரியான எடை:
நாம் நமது வயது, உயரம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, மூட்டு, என நம் உடலின் பாரத்தை தாங்கும் முக்கிய ஜாயின்டுகளில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் கீல்வாதம் ஏற்படுகிறது.
உடல் உழைப்பு அவசியம்:
இன்றைய நவீன காலத்தில், அனைத்துமே டெஸ்க் வேலை என்றாகி விட்டது. உடல் உழைப்புக்கான வழியும், அதற்கான எனர்ஜியும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உடலை எப்போதும் ஆக்டீவ்வாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். எடைத் தூக்குவது போன்ற பளுவான பயிற்சிகள் செய்ய இயலவில்லை என்றால், சைக்ளிங், நடை பயிற்சி, ஜாக்கிங் என உடலுக்கு சிறிய அசைவுகள் கொடுத்து கொண்டே கூட ஆரோக்கியத்தை பேணலாம்.
எலும்புகளுக்கு ஸ்ட்ரெஸ் கூடாது:
நாம் நடக்கும் போதோ, நிற்கும் போதோ, உட்காரும் போதோ நம் உடலின் நிலை பற்றிய கவனம் தேவை. உடலின் ஒரு பகுதிக்கு மட்டும் எடையை கொடுத்து சரிந்து நிற்பது விலா, இடுப்பு பகுதிகளில் அதிக அழுத்தம் உருவாக காரணமாகின்றது. எனவே நேராக நிறுத்தி கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் எலும்புகள் உறுதியாக! கண்டிப்பாக சாப்பிட வேண்டிய '4' உணவுகள்
அழற்சி எதிர்ப்பு உணவுகள்:
ஒமேகா - 3 சத்துக்கள் இருக்கும் மீன் வகைகள், வால்நட்ஸ், போன்ற உணவுகள், எலும்புக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக இருக்கும் பால் மற்றும் கீரை வகைகள், காய் , பழங்கள் போன்ற அழற்சி எதிர்ப்புக்கு உதவும் உணவு வகைகளை அதிகம் எடுத்து கொள்வது எலும்புகளில் வரும் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.
காயப்படுத்தாதீர்கள்:
அவசரமயமாகி வரும் உலகில் கவனச்சிதறலும் அதிகம் நிகழ்கிறது. கவனக்குறைவால் நம்மை நாமே இடித்து காயப்படுத்தி கொள்வதும் நடக்கிறது. இவைத் தவிர, விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர்களுக்கு காயங்கள் என்றால் சகஜம். எனவே அதற்கு தேவையான பேடுகள், காலணிகளுடன் விளையாடுவது சிறந்தது.
தண்ணீர்:
மனித உடல் இயங்குவதற்கு முக்கியமான காரணி நீர்தான். உடலின் நீர்சத்து தேவையான அளவு இருந்தால் தான் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் மன வலுவோடு சேர்த்து உடல் வலுவையும் கெடுத்து விடுகிறது. மெடிட்டேஷன் ,யோகா, மூச்சு பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல் நலத்தை பேணலாம்.
எலும்புக்கு வலு சேர்க்கும் உணவுகள்:
நமது எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்வதற்கு கீரைகள், பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், மீன் வகைகள், பால், டோபு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.