தொப்பையை எளிதாக குறைக்க இந்த வழிகளை பழக்கப்படுத்திக் கொண்டலே போதும்...

 
Published : Dec 01, 2017, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
தொப்பையை எளிதாக குறைக்க இந்த வழிகளை பழக்கப்படுத்திக் கொண்டலே போதும்...

சுருக்கம்

Its easy to get these tips to easily reduce the cap ..

தூக்கம்

நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

உப்பை தவிர்ப்பது நல்லது

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.

காய்கறிகளை அதிகம் சாப்பிடணும் 

இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கணும்

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள் செய்யணும்

நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

மூச்சு பயிற்சி

தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடணும்

தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கணும்

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடணும்

நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடணும்

நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

நடக்கணும்

எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.

சைக்கிள் ஓட்டணும்

சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க