உங்களுக்குத் தெரியுமா? அம்மை நோய் முன்பு தாக்கியவர்களுக்குதான் அக்கி நோய் வருமாம்...

 
Published : Dec 01, 2017, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
உங்களுக்குத் தெரியுமா? அம்மை நோய் முன்பு தாக்கியவர்களுக்குதான் அக்கி நோய் வருமாம்...

சுருக்கம்

Do you know It is for those who attacked before the disease.

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். 

ஆனால், அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்களுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.

மருந்து – 1

நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து – 2

ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து – 3

சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்