நீங்கள் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடியவர் என்றால், உங்களுக்கு ஏர் ஃபிரையர் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அசைவம் அல்லது சைவம் என எந்த உணவாக இருந்தாலும், ஏர் ஃபிரையரில் சமைத்து முடித்தபின், அதை சுத்தம் செய்வது முக்கியம். அதற்காக பலரும் ஒரு அலுமினியத் தாளை ஏர் ஃபிரையரில் வைத்து, அதற்கு மேல் உணவுகளை வைத்து சமைக்கின்றனர். ஒருசிலர் இப்படி சமைப்பது உடலுக்கு கேடு தருவதாக கூறி, சில அறிவியல் காரணங்களை முன்வைக்கின்றனர். ஏர் ஃபிரையரில் அலுமினியத் தாளை பயன்படுத்தி சமைப்பது உகந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிபுணர்களின் கருத்து
இதுதொடர்பாக நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், ஏர் பிரையரில் அலுமினியத் தாளை வைத்து சமைப்பது பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். ஏர் பிரையர்கள் அதிவேக மின்விசிறிகளைப் பயன்படுத்தி உங்கள் உணவைச் சுற்றி சூடாக சமைத்து தருகிறது. எனவே, அதை அலுமினியத் தாள்களில் வைத்து ஏர் ஃபிரையரில் வைப்பதன் மூலம் பொறிமுறையை பாதிக்காது என்று தெரிவிக்கின்றனர்.
சுவை மாறாது
ஏர் ஃபிரையரில் உணவுகளை அலுமினியத் தாள்களில் வைத்து சமைக்கும் போது, அதன் கூடையில் உணவு பத்திரமாக இருக்கும். கூடையில் இருக்கும் துளைகளின் வழியாக சாறுகள் எதுவும் கொட்டாது. இதனால் சுவை மாறாமல் இருக்கும். மேலும் அலுமினியத் தாள் வைத்து ஏர் ஃபிரையரில் சமைக்கும் போது, சுத்தப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
உணவு பத்திரமாக இருக்கும்
அலுமினியத் தாளைப் பயன்படுத்துவது உங்கள் ஏர் பிரையருக்கு உள்ளேயும் வெளியேயும் மென்மையான உணவைப் பெற உதவும். ஏர் பிரையரின் உள்ளே இருக்கும் கூடைக்குள் அலுமினியத் தாளில் வைத்து சமைக்கும் போது, உணவு எதுவும் கீழே விழாது. இதனால் தாளில் சுற்றப்பட்டு வைக்கபப்ட்ட மென்மையான உணவுத் துண்டுகளை ஏர் பிரையர் கொள்கலனில் இருந்து எடுப்பதும் மிகவும் எளிதானது.
நினைவாற்றல், புத்திக்கூர்மை- இரண்டையும் மழுங்கடிக்கச் செய்யும் உணவுகள்..!!
ஏர் பிரையரில் உணவு சமைக்க டிப்ஸ்
முடிந்தவரை சிறியளவில் இருக்கும் அலுமினியத் தாள்களை மட்டுமே ஏர் பிரையரில் வைத்து சமைக்க வேண்டும். இதனால் உணவு சமமாக சமைக்கப்படுகிறது. மேலும், ஏர் பிரையர் டிராயரின் அடிப்பகுதியில் தாள்களை போடாதீர்கள். அதை கீழே வைத்தால் சமையலின் செயல்திறன் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி இதனால் ஏர் பிரையரும் சேதப்படுத்திவிடும்.
பிரையரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அலுமினியத் தகடு ஒரு எதிர்வினை உலோகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே தக்காளி, வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற அதிக அமிலங்களை வெளியிடும் உணவுகளை உள்ளே வைக்க வேண்டாம். அலுமினியத் தாளைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், பார்ச்மெண்டு காகிதத்தை வைத்து உணவுகளை சமைக்கலாம்.