உலர்ந்த இஞ்சியை சுக்கு என்பார்கள். மக்களிடம் சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்கிற பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதற்கு காரணம், அவ்வளவு மருத்துவ குணங்கள் சுக்கில் காணப்படுகின்றன.
இஞ்சி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மதிய உணவுக்கான பசியை உருவாக்க உதவுகிறது. இஞ்சி சாறுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அதன்மூலம் மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினசரி உணவில் இஞ்சி சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறு சரிசெய்யப்படுகிறது, ஒருவேளை உங்களுக்கு அல்சர் நோய் பாதிப்பு இருந்தால் விரைந்து குணமாகிவிடும். ஆனால் குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு இஞ்சியை விட சுக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சியை விட சுக்கு செரிமானத்தை எளிதாகிவிடும். குடலில் ஏற்படும் பிணி, அல்சர் போன்ற பாதிப்புக்கும் சுக்கு சாப்பிடுவது நல்ல பலனை தரக்கூடியதாகும். எனினும், இஞ்சி மற்றும் சுக்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு எப்போதாவது சிரமம் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்றால், கீழே தொடர்ந்து படியுங்கள்.
இஞ்சி
undefined
உங்களுக்கு வியர்வை சுழற்சி குறைவாக இருந்தால், இஞ்சியை சாப்பிடலாம். அதேபோன்ற உடலின் வெளிப்புறச் சுழற்சியை அதிகரிக்கவும் இஞ்சி சாப்பிடுவது முக்கியம். அப்போது தான் உடலில் இருக்கும் கழிவுகள் போகும். மாதவிடாய் வலியைப் போக்க பெண்கள் இஞ்சியைப் போட்டு, பால் சேர்க்காமல் தேநீர் தயாரித்து குடிப்பது பிரச்னையை தீர்க்கும். உடல் வலி, எலும்பு வலி, மூட்டுப் பிரச்னையை போக்கவும் இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. உங்களுக்கு மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறு இருந்தாலும், தினசரி சாப்பிடும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.
போனிலேயே மூழ்கிக் கிடப்பதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகுகிறீர்களா..?? இதை படியுங்கள்..!!
சுக்கு
உங்களுக்கு மந்தமாக செரிமானம் நடைபெறுகிறது, இதனால் நச்சு வெளியேறுவதில் பிரச்னை நீடிக்கிறது என்றால் சுக்கு சேர்த்து சாப்பிடவும். அதேபோல நெஞ்சில் சளி இறங்குவது, நீர் தங்குவது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடவும் சுக்கு போட்டு காப்பி அல்லது தேநீர் குடிக்கலாம். மூட்டுவலி போன்ற உயர் அழற்சி சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபடவும் சுக்கு பெரிதும் உதவுகிறது.
சுக்கி இஞ்சியில் இருந்து வேறுபடுவதற்கான காரணம்
அசைவ உணவு சாப்பிடாதவர்கள், இஞ்சியை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள். உங்களுக்கு அதுபோன்ற பிரச்னை இருந்தால், தாராளமாக இஞ்சிக்கு பதிலாக சுக்கு சேர்க்கலாம். மசாலாப் பொருகள், பொடிகளில் கூட சுக்குப் போட்டு அரைக்கலாம். இஞ்சியுடன் ஒப்பிடுகையில் சுக்கு சாப்பிடுபவர்களுக்கு விரைவாக செரிமானக் கோளாறு சரியாகி விடுகிறது. உடலில் அக்னியை அதிகரித்து சளித் தொந்தரவை சீக்கரம் விரட்டி விடும். எந்த பருவக் காலத்திலும் சுக்கு சாப்பிடலாம். எதுவுமாகாது.