பல் வலியை போக்க இப்படியொரு மருத்துவமா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே...

Asianet News Tamil  
Published : Jul 02, 2018, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
பல் வலியை போக்க இப்படியொரு மருத்துவமா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே...

சுருக்கம்

Is this a medicine to get rid of dental pain? Do not know this day ...

பல் வலியை போக்கும் வீட்டு வைத்திய முறைகள்...

** இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

** பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

** ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

** பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

** வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

** பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணெய், எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

** காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

** இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

** சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake