Brush teeth at night: இரவில் பல் துலக்குதல் அவசியமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

By Dinesh TG  |  First Published Jan 25, 2023, 10:55 PM IST

தினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்ற முக்கியமான செயலாகும். பற்களை நன்றாக துலக்கினால் தான், கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்கும். ஒருவேளை, கிருமிகள் வயிற்றின் உள்ளே சென்றால், அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், தினந்தோறும் பல் துலக்குவது, அனைவரும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயலாகும்.
 


தினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்ற முக்கியமான செயலாகும். பற்களை நன்றாக துலக்கினால் தான், கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்கும். ஒருவேளை, கிருமிகள் வயிற்றின் உள்ளே சென்றால், அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், தினந்தோறும் பல் துலக்குவது, அனைவரும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயலாகும்.

பல் துலக்குதல்

Latest Videos

undefined

நம்மில் சிலர் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்து விட்டு, உணவை சாப்பிட்டு பிறகு நேரடியாக சென்று பல் துலக்குவார்கள். இது முற்றிலும் தவறானது என கருதப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் சாப்பிட்ட பிறகு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையிலும் வாய் அமில நிலையிலேயே இருக்கும். இந்த சமயத்தில் பல் துலக்கினால், பல் எனாமலில் இருக்கும் அமிலம் வெளியேறி விடும் எனக் கூறப்படுகிறது.

காலையில் பல் துலக்கல்

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கினால், இரவு முழுவதும் வாயில் உமிழ்நீரில் வளர்ந்து வரும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். பல் துலக்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு தான், உணவு சாப்பிடவோ அல்லது காபியை குடிக்கவோ செய்யலாம்.

உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக, பல் துலக்குவதும் தவறான செயல் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு செய்வதனால் பற்களின் எனாமல் மென்மையாகி, கூடிய விரைவில் அதனை சிதைத்து விடும் அபாயமும் உள்ளது.

உணவை சாப்பிட்ட பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து, அதன் பிறகு பல் துலக்க வேண்டும் எனக் கூறபடுகிறது.

இரவில் பல் துலக்குதல்

இன்று டின்னருக்கு இந்த முட்டை கொத்து தோசையை செய்து பாருங்க!

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக பல் துலக்க வேண்டும். இவ்வாறு பல் துலக்குவதன் மூலம், ஒரே இரவில் வாயில் நோய்க்கிருமி எண்ணிக்கையை அதிகரிக்கும் அனைத்து விதமான எச்சங்கள் மற்றும் உணவு குப்பைகள் போன்றவை அகற்றப்படுகிறது.

பல் துலக்கும் சமயத்தில், அதிக அழுத்தம் கொடுத்து பற்களை துலக்கக் கூடாது. அப்படி செய்வதால், பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உண்டாகும். அனைவரும் ஒரு நல்ல ஃப்ளூரைடு பற்பசையைக் கொண்டு, தினந்தோறும் இரு முறை பல் துலக்கும் படி  பரிந்துரைக்கப்படுகிறது.

இருமுறை பல் துலக்குதல் அவசியம்

ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும், வாயை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமாகும். இப்படி செய்யும் போது பல் ஈறுகளுக்கு இடையில் இருக்கும் தேவையற்ற உணவுத் துகள்கள் அகற்றப்பட்டு விடும். ஆக, இறுதியாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதாவது, காலையில் எழுந்தவுடன் ஒரு முறை மற்றும் இரவில் தூங்குவதற்கு முன்னதாக ஒரு முறை என பல் துலக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

click me!