அதிக வியர்வையால் ஒரே கஷ்டமாக இருக்கா? உங்களுக்காகவே இந்த சூப்பர் டிப்ஸ்...

First Published Jun 20, 2018, 3:12 PM IST
Highlights
Is it hard for more sweating? These super tips for you ...


உடலில் உண்டாகும் அதிக வியர்வையை கட்டுப்படுத்தும் வழிகள் இதோ...

** சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.

** நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம். நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.

** வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.

** பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர் வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

click me!