நோய்களை குணமாக்குவதில் இந்த பூக்களுக்குகூட பெரும் பங்கு உண்டு...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
நோய்களை குணமாக்குவதில் இந்த பூக்களுக்குகூட பெரும் பங்கு உண்டு...

சுருக்கம்

These flowers have a great role in curing diseases ...

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் பூக்களும் அவை குணமாக்கும் உடலியல் பிரச்சனைகளையும் இங்கே காணலாம். 

** ஆவாரம் பூ : 

ஆவாரம் பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும். சர்க்கரை வியாதி குணமாகும். அதன் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும்

** செம்பருத்திப்பூ :

செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.

** அன்னாசிப்பூ:

அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.

** ரோஜாப் பூ :

வாய்ப்புண்ணுக்கு நல்லது.அவ்வபொழுது மென்று சாப்பிடுங்க. பாலில் கலந்து குடித்தால் ரத்த விருத்தி உண்டாகும். கபம் கரையும்.

** தாழம்பூ :

தாழம் பூவில் சர்பத் செய்து 1 மாதத்திற்கு 2 முறை குடிங்க அம்மை நோய் அண்டாது. இதய நோய்கள் நெருங்காது.

** ஒற்றை நந்தியாவட்டை

கண்ணுக்கு குளிர்ச்சி,இரவு தூங்கும் போது கண்ணில் வைத்து தூங்குங்க கண் எரிச்சல் இருக்காது. கண் பாதிப்புகள் நீங்கும்.
 

PREV
click me!

Recommended Stories

Summer Heart care இதய நோயாளிகள் கவனத்திற்கு... கோடை வெயிலில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட்' ஆபத்துக்கள்
Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'