ஆண்களை பாதிக்கும் முக்கியமான இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி ஒரே ஒரு காய்க்குதான் உண்டு...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஆண்களை பாதிக்கும் முக்கியமான இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி ஒரே ஒரு காய்க்குதான் உண்டு...

சுருக்கம்

There is only one piece of energy to cure these three diseases that affect men ...

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களுமே ஆண்களை பாதிக்கும் முக்கியமான நோய்களாகும்.

 இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது. ஆம். பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும்,உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

ஒரு கப் தண்ணீர்.

ஒரு கையளவு பூசணி விதை.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :

இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும்.இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதை வடிகட்டி விட வேண்டும்.இப்போது பூசணி விதை டீ ரெடி.இதை நீங்கள் பருகலாம்.இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது.

நன்மைகள் :

பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு ஆகும்.இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Bad Breath : மோசமான வாய் துர்நாற்றத்தால் பேசவே கூச்சமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்டவாடை நீங்கும்
Fennel Seeds Benefits : சோம்புக்கு இவ்வளவு சக்தியா? தொப்பையை குறைக்க சிறந்த தேர்வு! எப்படி சாப்பிட்டால் எடை குறையும்?