
இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுவது "வெந்தயம்".
வெந்தயத்தில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளன. இவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை கரைத்து கொழுப்பால் உடல் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் உதவுகிறது.
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்கிறது. பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும்.
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.
வெந்தய நீர் தயாரிப்பு மற்றும் குடிக்கும் முறை
** ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.
** வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.