கேள்விக்கென்ன பதில்: உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் எது?

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
கேள்விக்கென்ன பதில்: உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் எது?

சுருக்கம்

What is the answer to this question What does it mean to reduce body weight faster?

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் "சீரகம்".

தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறதாம். மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

உடல் எடை குறைய சீரகத்தை இப்படி சாப்பிட வேண்டும்...

** இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடித்தால் எடை குறையும்.

** சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

** 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

** தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

** ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட்டால் எடை குறையும். 


 

PREV
click me!

Recommended Stories

பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks
குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,