காபியில் பால் சேர்ப்பது நல்லதா? அப்படி குடிக்கலாமா?

By Dinesh TGFirst Published Feb 2, 2023, 12:03 PM IST
Highlights

உணவு தொடர்பான ஆய்வை டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது. அதில், பால்,  கேஃபைன் சேர்க்கை குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

நம்மில் பெரும்பாலோர் எழுந்தவுடன் ஒரு கோப்பை சூடான காபி அல்லது டீயுடன் தான் அன்றைய நாள தொடங்குவோம். ஆனால், காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. எனினும், அது குறைந்தபாடில்லை. 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்/தண்ணீர் குடித்து நாளை தொடங்குவது நல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேண்டுமானால், காலை உணவுக்கு பிறகு டீ அல்லது காபி குடிப்பது நல்லது என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

பெரும்பாலான மக்கள் காபி மற்றும் டீயை நம்பி மட்டுமே அந்தநாளை ஓட்டுகின்றனர். முக்கியமாக வேலையின் போது ஏற்படும் அலுப்பைப் போக்க, ஆற்றலைப் பெற அல்லது தூக்கத்தை சமாளிக்க டீ அல்லது காபி குடிக்கின்றனர். அதனால் பால் சேர்ந்து காபி குடிப்பது நல்லதா? அல்லது வெறும் டிக்காக்‌ஷன் காபி மட்டும் குடிப்பது நல்லதா? என்கிற பொது விவாதம் இன்னும் பலரிடையே நிலவுகிறது. பால் - ஒவ்வாமை உள்ளவர்களால் பால் காபி குடிக்க முடியாது. இதற்கிடையில், இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாதவர்களுக்கு காபியில் பால் சேர்ந்து தாராளமாக குடிக்கலாம்.

நினைவாற்றல், புத்திக்கூர்மை- இரண்டையும் மழுங்கடிக்கச் செய்யும் உணவுகள்..!!

இதற்கிடையில் பால் காபி குடிப்பது தொடர்பாக ஒரு ஆய்வை டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதுபற்றிய விவரங்கள் அந்நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு வேதியியல் இதழில் வந்துள்ளன. காபியில் உள்ள 'பாலிஃபீனால்' என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு, பல உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

பாலில் புரதம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்திருக்கும். அது கலந்த காபியை அருந்துவதால், பல வழிகளில் உடலை மேம்படுத்தவும் மிகவும் உதவியாக உள்ளது. இந்த கண்டுபிடிப்பை அடைய அவர்கள் நடத்திய பரிசோதனை தொடர்பான தகவல்களும், அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த தலைப்பில் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், இந்த ஆய்வுகள் அனைத்தும் உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால் காபி ப்ரியர்கள் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் எதுவும் அளவுடன் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். 
 

click me!