சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தினால் உங்களுக்குள் நடக்கும் அதிசயங்கள்…

Asianet News Tamil  
Published : Apr 10, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தினால் உங்களுக்குள் நடக்கும் அதிசயங்கள்…

சுருக்கம்

If you stop eating sugar you will be completely wonders

சர்க்கரை பல நோய்களை உண்டாக்கும் மிக மோசமான பொருள்.

பிஸ்கட்ஸ், சாஸ், இனிப்பு வகைகள், யோகார்ட் என பலவற்றிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவையனைத்தும் உடலுக்கு நல்லதல்ல.

சர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் முழுவதும் நிறுத்தினால் உங்களது ஆரோக்கியம் பலமடங்கு மேம்படும்.

1.. பல்வேறு ஆபத்தான தாக்குதலிலிருந்து உங்கள் இதயம் பாதுகாக்கப்படுகிறது. இன்சுலின் அதிகம் தூண்டபடாத நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய துடிப்பு பல மடங்கு ஆவதும் தடுக்கப்படுகிறது. இதனால் இதயம் பல மடங்கு பலம் பெறுகிறது.

2.. டீன் ஏஜ் வயதினர் சாப்பிடும் இனிப்புகள்தான் சருமத்திற்கு முதல் எதிரி. முகப்பரு, எண்ணெய் வடிதல் ஆகியவை இல்லாத சுத்த சருமம் வெளிப்படும். இளம் வயதிலேயே வரும் முதிர்ச்சி தடுக்கப்படும்.

3.. சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன தடுமாற்றம் உண்டாகும். ஆனால் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பவரகளுக்கு உங்கள் மன நிலையில் உள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியடைய வைக்கும்.

4.. ஞாபக சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் அதிக சர்க்கரை மூளைக்கு செல்லும் தகவல் பரிமாற்ற சங்கிலியை உடைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் ஞாபக மறதி அடிக்கடி உண்டாகும். நீங்கள் சர்க்கரையை குறைக்கும் போது உங்கள் மூளை செல்கள் பலம் பெறும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல் புரியும்.

5.. தொடர்ந்து 4, 5 மாதங்கள் சர்க்கரை சாப்பிடாதிருந்தால் உங்கள் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் சர்க்கரை ஒரு நாளைக்கு 200 கலோரி அதிகமாக காரணம். இதனாலே உடல் எடை கூடும்.

இந்த ஐந்து அதிஅற்புத மகத்துவத்தை பெற நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks
குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,