
கல் சுண்ணாம்பு, கிளிஞ்சல் சுண்ணாம்பு என்று சுண்ணாம்பில் இரண்டு வகை உள்ளன.
சுண்ணாம்பை வெள்ளைப் பூச்சுக்களுக்கும், வெற்றிலை போடவும்தான் அதிக பட்சம் நாம் பயன்படுத்துகிறோம்.
சுண்ணாம்பை பற்றி நமக்கு தெரிந்த பயன்பாடும் அதுதான். ஆனால், சுண்ணாம்பு அதைவிடவும் நிறைய பயன்களை தன்னகத்தே அடக்கியுள்ளது.
1.. வீட்டின் சுவருக்கு சுண்ணாம்பை பூச்சுவதால் வீட்டில் பூச்சிகள் நெருங்காது.
2.. மேலும் புற ஊதாக் கதிர்களிலிருந்து வீடுகளை பாதுகாத்து, உங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
3.. நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை வெற்றிலைப் போடுவதால் நமது எலும்புகளுக்கு வழங்குகிறது.
4.. பூச்சிக்கடிக்கு சுண்ணாம்பு வைப்பர். ஆரம்பத்தில் எரிந்தாலும், அது விஷத்தை உடம்பில் பரவ விடாது.