உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முட்டைகோஸ் தடுக்கும்…

 
Published : Apr 10, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முட்டைகோஸ் தடுக்கும்…

சுருக்கம்

Did you know? The growth of malignant cells that are resistant to cabbage

முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி, விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள் உடம்பின் உணர்வுகளுக்கும், உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.

முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.

சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள துணை செய்கிறது.

பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

விட்டமின் – கே நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க