
நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் கடந்துபோகும் போது, ஒவ்வொரு பிரச்னைகளை சந்திக்கிறோம். இதில் பல பாதிப்புகள் உரியமுறையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், சரியாகிவிடக் கூடியதாகவே உள்ளது. ஆனால் சில பிரச்னைகளை அப்படி கையாள முடியாது. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் உயிர்வாழ்வது சவாலாக மாறிவிடும்.
ஆரம்பத்தில் சாதாரண பிரச்னையாக தெரிந்தாலும் உரிய சிகிச்சையையும் வாழ்க்கைச் சூழலையும் மாற்ற வேண்டிய கட்டாயம் சில பாதிப்புகளுக்கு உண்டு. அவை தான் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால். இந்த வரிசையில் நீரிழிவு நோயும் அடங்கும். ஆனால் அதன் கதையே வேறு என்பதால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவு அதிகரிப்பது கருத்தில் எடுத்துக்கொள்வோம்.
இருதயம் நோய் பாதிப்புக்கு ஆளாவதற்கு இவ்விரண்டு பாதிப்புகள் தான் முக்கிய காரணமாக உள்ளன. பல்வேறு மருத்துவ அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் இருதய நோய் பாதிப்புக்கு முதன்மையான காரணமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் சுட்டிக்காட்டப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை முறையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நோய்கள் தான் இவை.
இதய நோய்களில், குறிப்பாக மாரடைப்பு போன்றவற்றுக்குத் தனி நபர்களை ஆளாக்குவதில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாரடைப்பு மட்டுமல்ல பக்கவாதம் ஏற்படுவதற்கும் இந்நோய் பாதிப்புகள் தான் பெரியளவில் காரணமாக உள்ளன. நோயாளிக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதை உணர முடியாது. அதனால் தன பி.பி-யை சைலன்ட் கில்லர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயம் கடினமாக உழைக்க வேண்டியாதாகிவிடுகிறது. இந்த அழுத்தத்தால் தமனிகளில் உள்ள செல்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்கும் தமனிகளில் எங்கு வேண்டுமானாலும் சேதம் ஏற்படலாம். ஆனால் அதிகளவிலான பாதிப்பு கால்களில் இருக்கும் தமனிகளில் காணப்படுகிறது.
குழந்தைகளுக்கு மழைக்கால நோய் பாதிப்பு வாரமல் தடுக்க இதைச் செய்யுங்க..!!
இதயத்தில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் கடுமையாக தடைபடுவதே இதற்குக் காரணம். அதையே மருத்துவ உலகம் புற தமனி நோய் என்று குறிப்பிடுகிறது. இது ஒருபோதும் ஆபத்தான நிலையாக மருத்துவர்கள் கூறுவது கிடையாது. ஆனால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உங்களுடைய இருதயம் பாதித்துள்ளதற்கான முதற்கட்ட அறிகுறி இந்நோயாகும்.
இந்த பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில், இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படலாம். காலில் ரத்த ஓட்டம் குறைவதை எந்த அறிகுறிகள் கொண்டு கண்டறியலாம் என்பதை பார்க்கலாம். வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த பாதங்கள், சிவப்பு அல்லது நீல கால்விரல்கள், கால்களில் முடி உதிர்தல் மற்றும் சில சமயங்களில், கால்விரல்களில் லேசான கூச்ச உணர்வு ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். அப்போது பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.