நீங்கள் மட்டும் வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலை முடி உதிர்வதை தடுக்கலாம்...

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
நீங்கள் மட்டும் வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலை முடி உதிர்வதை தடுக்கலாம்...

சுருக்கம்

If you only use onion this can prevent hair loss

இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் பலர். இதனால் இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்களும் ஏராளம். 

தலைமுடி உதிர்ந்தால், பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு. இப்படி தலைமுடி அதிகம் உதிர்வது ஒருவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது? 

1.. வெங்காய சாறு மற்றும் பாதாம்

எண்ணெய் வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள். இதனால் பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.

2.. வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயும் தலைமுடி உதிர்வதை எதிர்த்துப் போராடும். அத்தகைய தேங்காய் எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

3.. வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில்

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

4.. வெங்காய சாறு மற்றும் வெதுவெதுப்பான நீர்

வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

5.. வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை

வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி சுத்தமாகும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake