உங்களுக்குத் தெரியுமா? ஸ்ட்ராபெரியை இப்படி பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்...

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஸ்ட்ராபெரியை இப்படி பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்...

சுருக்கம்

Strawberry remove blockades

 

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீக்க:

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் அழகை பாதிக்கும் ஒன்றாகும்.

நல்ல வெள்ளையாக இருப்பவர்களுக்கு கரும்புள்ளி ஏற்பட்டால், அவை அப்படியே காட்டிக்கொடுக்கும், கொஞ்சம் மாநிறம் அல்லது கருப்பாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அவ்வாறு கரும்புள்ளிகள் இருப்பவர்கள் பல வகை டிப்ஸ்களை செய்திருப்பீர்கள். 

இந்த ஸ்ட்ராபெரி பேஷியலை செய்துபாருங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும்.

செய்முறை 

** நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

** வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். 

** சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

** 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.

** ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.

** இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

** சருமத்துளையில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க, அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன் 1 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளாரை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவும் போது, மசாஜ் செய்து கொண்டே கழுவ வேண்டும்.

** இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் நன்கு தெளிவாக, பளிச்சென்று காணப்படும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake