
1.. பாலில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் இரத்த சோகை மாறும்.
2.. உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிறிது தேன் உண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படாது.
3.. முருங்கைக்காய் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
4.. தேனுடன் தண்ணீர் கலந்து குடிக்க நாட்பட்ட சீதசுரம் போகும்.
5.. தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வயிற்று வலி நீங்கும்
6.. பார்லி நீருடன் தேனைக் கலந்து குடித்தால் அஜீரணம், ஜலதோஷம் போகும்.
7.. கடுகையும் இஞ்சியையும் பொடி செய்து தேன் கலந்து வாய் கொப்பளித்தால் தலைவலி போகும்.
8.. தேனுடன் எலுமிச்சம் பழரசம் கலந்து குடித்தால் வாதநோயைத் தவிர்க்கலாம்.