
எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
எலுமிச்சை - 1/2
தேன் - சிறிதளவு
பட்டைப் பொடி - 1 சிட்டிகை
தயாரிக்கும் முறை
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், மஞ்சள் தூள் மற்றும் பட்டை பொடி ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்தால் பானம் தயார்.
கிடைக்கும் நன்மைகள்
1.. சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, மஞ்சள் தூள் சேர்த்து பருகும் போது, உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது.
2.. எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் மட்டுமின்றி, ஒரு சிட்டிகை பட்டை பொடியை கலந்து பருகி வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு சீராக்குவதோடு, உள்காயங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
3.. உணவு சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து பருகினால், பித்தநீரின் ஓட்டத்தை அதிகப்படுத்தி, உணவுகளால் உடலில் தேங்கிய கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
4.. எலுமிச்சை சாறு கலந்த இந்த பானத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளைச் செல்கள் சிதைவுற்று ஏற்படும் மூளை கோளாறுகளான அல்சைமர் மற்றம் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
5.. ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
6.. மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப் படுபவர்கள், இந்த பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
7.. மஞ்சள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, பித்தப்பையில் பித்தநீரின் உற்பத்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டி, பித்தக்கற்கள், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.